பாரி­னில் உனை­ மீட்க யார் வ­ருவார் ?

June 09, 2017

மகளே உன்­னைத்தான்
அவ­தா­னத்­தோடு – நீ
உனது ஒவ்வோர்
அடி­யையும் எடுத்­துவை
நிதானம் தப்பி
சப­லத்தை நீ கைப்­பி­டித்தால்
அப­லத்தில் உனை வீழ்த்தி
ஆனந்தப் பட
தருணம் பார்த்து நிற்­கி­றது
இங்கு ஓர் தலை தெறித்த
கூட்டம்
இங்­கி­தமாய் அது கதைக்கும்
இரவு பகல்
கைபேசி எடுத்து உற­வாடும் 
குறுந்­த­கவல் செய்தி
பரி­மாற்றம்
உதவும் உறவு போல்
ஓரங்க நாட­க­மாடும்
தருணம் வாய்த்­ததும்
காய் நகர்த்த காத்­தி­ருக்கும்
பருவப் பெண் தேவை­யில்லை
பாலியல் வேட்­டைக்கு
பச்­சிளம் பால­கரைக் கூட
படுக்­கையில் தூக்­கிச்­சென்று
பசி­யாறும் காமுகர் கூட்டம்
எனவே மகளே 
நல்­லது கெட்­டதை
பகுத்­த­றி­வுடன்
பார்த்து நட
பாரினில் உனை மீட்க
யார் வருவார்
நீயே சொல்!