இதற்குத்தானே ஆசைப்பட்டேன் ...!

June 15, 2017

விண்ணிலே ஒரு வெண்ணிலவு.
என்னிலே ஒரு பெண்ணிலவு – அவள் கண்ணிலே உள்ள பேரழகு
எனக்குள் நுழைந்து,
தன்னிலே உலாவுதே
தினம் ஒரு பொழுது.
விண்ணில் இல்லை
இவள் போல் 
ஒரு நிலவு – இந்த
மண்ணில் உலவும்
பெண்ணில் இல்லை
இதுபோல் 
ஓர் அழகு
அதனால்
இவள் வேண்டி
தவம் கிடந்தேன் அந்த
பிரம்மனின் சந்நிதியில்
தன் தலைமேல்
கை வைத்து
சிலை போல் ஆகிவிட்டான்
இவளைப் படைத்த
இந்த பிரம்மனும்
இவளைப்போல
இன்னொரு படைப்பு
இனியும் இல்லை
தன்னிடத்தில் என
விண்ணிடத்தில் போய்
ஒளிந்து கொண்டான் –
அவன், இவளை மட்டும்
என்னிடத்தில்
தனியாகவே
தந்து விட்டு.
இதற்குத்தானே
ஆசைப்பட்டேன்
பிரம்மா.
அதற்காகவே
நன்றி சொல்வேன்
உனக்கு ஒவ்வொரு
பொழுதாய்...