வட்ஸ் – அப் பயனாளிகள் எதிர்நோக்கவிருக்கும் ஆபத்து…!

January 18, 2018

ருகர் பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான பௌல் ரோஸ்லர்,

“வட்ஸ் – அப் server ஐ ஹெக் செய்வதன் மூலம், வட்ஸ் – அப் குழுக்களுக்குள் நுழைந்து, வெளியிலிருந்து ஒருவரை அந்த குழுவுக்குள் இணைக்க முடியும், இப்படி இணைப்பதால் அந்த குழுவில் உள்ள அனைத்து நபர்களின் வட்ஸ் – அப் எண்களோடும் ஹெக்கர்களுக்கு ‘End to end encryption’ எனப்படும் தனிப்பட்ட உரையாடல் பாதுகாப்புத் தன்மையைப் பெற்றுவிட முடியும்.

இதைப்பயன்படுத்தி ஹெக்கர்கள்  வட்ஸ் – அப் உரையாடல்களின்  அந்தரங்கத் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் திருடலாம்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் வட்ஸ் – அப் server ஐ ஹெக் செய்வதற்கு மிகச்சிறந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஹெக்கர் குழுவால் மட்டுமே முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளை வட்ஸ் – அப் செயலியின் தாய் அமைப்பான முகநூல் நிறுவனம் மறுத்துள்ளது.