400 வருடங்களுக்கு முன்பே ஐபோன் இருந்துள்ளது : ஆதாரம் இதோ

January 25, 2018

400 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் இருக்கும் ஓவியத்தில் நபர் கையில் ஐபோன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலப்பயணம் (Time Travel) என்பது மனிதர்கள் முந்தைய காலத்துக்கும் அல்லது வருங்காலத்துக்கும் சென்று வாழ்வதை குறிக்கும்.      இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக கண்டுப்பிடிக்கப்பட்ட ஐபோன் 400 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  Umberto Romano என்ற ஓவியர் கடந்த 1937ல் அமெரிக்கர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தார்கள் என்ற ஓவியத்தை வரைந்துள்ளார்.அந்த ஓவியத்தில் கூட்டமாக மக்கள் உள்ளனர்.

அதில் உட்கார்ந்திருந்த நிலையில் இருக்கும் ஒருவர் கையில் ஒரு பொருளை வைத்து இயக்குவது போல உள்ளது.  குறித்த பொருளானது ஐபோன் என கூறப்படுகிறது, பார்ப்பதற்கும் அப்படி தான் உள்ளது என்பது முக்கிய விடயமாகும்.

இந்த ஓவியம் அமெரிக்காவில் உள்ள தேசிய தபால் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.  இது உண்மையான ஓவியம் எனவும், திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காலப்பயணம் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இந்த விடயம் இன்னும் உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.