Designs

Baby Girl Dress Pattern

By  | 

அடிப்படை அளவுகள்:

Frock இன் முழு நீளம் – 26 + 34 = 60

Blouse Part

நீளம் – 26

தோற்பட்டை – 7

கழுத்து அகலம் – 5.5

கழுத்து ஆழம்

Front – 6.5

Back – 1.5

Armhole – 14

Armhole இல் இருந்து இடை வரையான அளவு – 26 – 14 = 12

இடை சுற்றளவு –15

Back Part – Triangle cut

பின் ஆழம் குறிக்கப்பட்டுள்ள புள்ளியிலிருந்து 2.5 குறித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் Armhole குறிக்கப்பட்டுள்ள புள்ளியில் இருந்து கீழ் நோக்கி  6 அங்குலம் குறித்து அந்த புள்ளியில் இருந்து கிடையாக கோடு கீறிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு கோடு கீறி முடிந்த இடத்தில் இருந்து பின் நோக்கி 7.5 அங்குலம் குறித்து அந்த புள்ளியினை கழுத்து பகுதியில் ஏற்கெனவே குறிக்கப்பட்ட புள்ளியுடன் இணையுங்கள்.

இந்த Triangle Cut இணை மாதிரி உருவின் உதவியுடன் வரைவதே இலகு.

SKIRT

நீளம் – 34

இடை சுற்றளவு – 64

வெட்டும் முறை:

முதலில் பிள்ளைகளின் மென்மையான சருமத்தை அழுத்தாத அடர்த்தியற்ற துணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

எடுத்துக் கொண்ட துணியை அதன் வடிவமைப்பிற்கேற்க இரண்டான மடித்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு மடிக்கப்பட்ட துணியின் அந்தத்தின் ஆரம்ப புள்ளியில் இருந்து கழுத்து அகலத்தை குறித்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு குறிக்கப்பட்ட புள்ளியில் இருந்து கீழ் நோக்கி இடை வரையில் அளவினை குறித்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் கழுத்து ஆழம், தோற்பட்டை மற்றும் Armhole அளவுகளை குறித்து புள்ளிகளை இணைத்து தையல் இடைவெளி வைத்து வெட்டிக் கொள்ளுங்கள்.

இனி Back Part

Back Part இணை Front Part போன்று முதலில் மாதிரி ஒன்றினை மெல்லிய கோடுகளால் கீறிக் கொள்ளுங்கள்.

பின்னர் கழுத்து ஆழம், தோற்பட்டை, Armhole ஆகியவற்றை குறித்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் மேலே Triangle Cut க்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.

Back Part Open என்பதால் வெட்டி முடிந்ததும் இரண்டு பகுதிகள் கிடைக்கும்.

Front Part க்கு ஒன்று மட்டுமே.

இனி மிகுதியுள்ள துணியில் Frock இன் Skirt பகுதிக்கான அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை:

முதலில் Back Part க்கான துணியை எடுத்து உள் பகுதி வெளியில் தெரியுமாறு வைத்து Side இடை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நூல் ஓடிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு நூல் ஓடிய பின்னர் அதனை வெளி புறமாக மாற்றி அயன் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் தோற்பட்டையை இணையுங்கள்.

கழுத்து கை பகுதியினை சிறிய மடிப்பாக மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

Side இணை இணையுங்கள்.

Skirt பகுதியின் Side ஐ இணைத்து கீழ் கரையை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

பின் அதன் இடை பகுதியை சுறுக்கி நூல் ஓடி அதனை தைத்து வைத்துள்ள Frock இன் மேல் பகுதியோடு இணையுங்கள்.

இறுதியான Frock இன் open பகுதிக்கு பட்டன் வைத்து தைத்துக் கொள்ளுங்கள்.

Note:

இந்த டிசைன் Open வேண்டாம் என நினைப்பவர்கள் அப்பகுதிக்கு Frock இன் நிறத்திற்கு பொருந்தும் வகையில் நெடி துணி அல்லது வேறு துணிகளை தைத்துவிடலாம்.

ஜெ. கலைவாணி

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login