Designs

Baby Girl Frock – 02

By  | 

ரடங்கு சட்டத்தின் பிடியில் இருந்துகொண்டு வீட்டிலுள்ள சிறியவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது சற்று கடினமான காரியம்தான். எனினும் சட்டத்திற்கு கட்டுப்படுவது நமது கடமையாகும்.
ஆரம்ப நாட்களில் நாளை மாறிவிடும் என நினைத்த எத்தனையோ விடயங்கள் இன்னும் மாறவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் சரிவர கூறவும் முடியவில்லை. எனினும் ஒவ்வொருவரும் வைரஸ் தொற்றினை தவிர்க்க பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக விடுமுறை என்றதும் வீட்டில் துள்ளித்திரிந்து விளையாடும் சிறியவர்களுக்கு பாதுகாப்பு விதியினை கற்றுக் கொடுங்கள்.
இனி உங்கள் சுட்டி பெண்ணுக்கான Frock இனை தைக்கும் முறை பற்றி பார்ப்போம்.

FROCK
அடிப்படை அளவுகள்
Frockஇன் முழு உயரம் – 17.5+14+14 = 45.5
தோற்பட்டை – 4.5
தோற்பட்டையில் இருந்து இடை வரையான நீளம் – 17.5
கழுத்து அகலம் – 5.5
கழுத்து ஆழம்
முன் – 5.5
பின் – 1.5
Armhole – 12.5
முன் பக்க open – 1.5

SKIRT PART
A – 60X14
B – 120X14

வேட்டும் முறை

  • எடுத்துக் கொண்ட துணியை இரண்டாக மடித்து முதலில் மேல் பகுதியின் அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.
  • அவ்வாறு அளவுகளை குறிக்கும் பொழுது முன் பின் அளவுகளை தனித்தனியே குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.
  • மீதமுள்ள துணியில் படத்தில் காட்டியுள்ளவாறு அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை

  • முதலில் முன் பக்க open ஐ மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
    தோற்பட்டையை இணைத்துக் கொள்ளுங்கள்.
  • கழுத்து மற்றும் கை பகுதியின் கரையை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
  • Side ஐ தைத்துக் கொள்ளுங்கள்.
  • Skirt பகுதிக்கான துணியின் கரையை மடித்து தைத்து Side இனையும்; தைத்து வட்டமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இவ்வாறு இரண்டு பகுதிகளையும் தைத்துக் கொள்ளுங்கள.
  • பின்னர் அவற்றை சுருக்கித் தைத்து நூல் ஓடி தைத்த இரண்டு பகுதிகளையும் Skirt வடிவத்திற்கு தைத்துக் கொள்ளுங்கள்.
  • அவ்வாறு தைத்துக் கொண்டதை Frock இன் மேல் பகுதியோடு இணைத்துக் கொள்ளுங்கள்.

ஜெ. கலைவாணி

You must be logged in to post a comment Login