Sewing

Circle Cape Neck Frock

By  | 

அடிப்படை அளவுகள்

Frockஇன் முழு நீளம்
Front — 96
Back — 93

தோற்பட்டை – 9.5

கழுத்து அகலம் – 7.5

முன் கழுத்து ஆழம் — 8.5

பின் கழுத்து ஆழம் — 21 – 3 = 18

Armhole — 21

கீழ கரை —- 26 – 12 = 38

இடை வளைவு — 2.5

 

DART
Armholeஇல் இருந்து — 5 அங்குலம் கீழ் நோக்கி — 3

CIRCLE CAPE
அகலம் — 15

கழுத்து அகலம் — 11

 

வெட்டும் முறை

  • Frockஇனை தைப்பதற்காக எடுத்துக்கொண்ட துணியை இரண்டாக மடித்துக்கொள்ளுங்கள்.
  • Frockஇன் Front, Back ஆகிய இரு பகுதிகளின் அளவுகளையும் தனித்தனியே குறித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
  • பின்னர் மீதமுள்ள துணியல் frockஇன் Neck capeஇன் அளவுகளை குறித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
  • Neckஇன் Cape வெட்டும்போது அதன் வளைவினை நேர்த்தியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

தைக்கும் முறை

  • முதலில் Neck capeஇன் கரைப்பகுதியினை சிறிய மடிப்பாக மடித்து தைத்துக்கொள்ளுங்கள். அல்லது ஓலக் செய்துகொள்ளுங்கள்.
  • அவ்வாறு தைத்து முடித்ததன் பின்னர் அதன் முனைகளை இணைத்து வட்ட வடிவமாக தைத்துக்கொள்ளுங்கள்.
  • இனி Frockஇன் தோற்பட்டையை இணைத்துக்கொள்ளுங்கள்.
  • Frockஇன் Back பகுதியின் Open பகுதியை சீராக தைத்துக்கொள்ளுங்கள்.
  • ஏற்கெனவே தைத்து வைத்துள்ள Neck capeஇனை Frock இன் கழுத்துப் பகுதியுடன் தைத்துக்கொள்ளுங்கள்.
  • கையின் கரையினை மடித்து தைத்துக்கொள்ளுங்கள்.
  • Sideஇனை இணைத்து தைத்துக்கொள்ளுங்கள்.
  • இறுதியாக Frockஇன் கரையை மடித்து தைத்துக்கொள்ளுங்கள்.

 – ஜெ.கலைவாணி

You must be logged in to post a comment Login