Cinema

Closs up – பிரபுதேவா

By  | 

பெயர்: பிரபுதேவா

வீட்டில் கூப்பிடுவது: பிரபு

பிறந்ததிகதி: 03.04.1973

பிறந்த இடம்: சென்னை. இரண்டு வயது வரை வளர்ந்தது மைசூரில் உள்ள தூரா கிராமம்.

ராசி: மீனம்

பட்டங்கள்: இந்தியாவின் மைக்கல் ஜெக்ஸன், நடனப்புயல், டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் என்ற செல்ல பட்டமும் உண்டு.

பத்ம விருது: பத்மஸ்ரீ (2019)

கல்வி: ஸ்கூல் ட்ராப் அவுட்.

மகன்கள்: விஷால் (இப்போது இல்லை) ரிஷி ராகவேந்திர தேவா

அப்பா: முகுர் சுந்தரம் (டான்ஸ் மாஸ்டர்)

அம்மா: மகாதேவம்மா. அம்மா என்றால் உசுரு. அவரது அம்மாவை அக்கா என்றுதான் இன்றுவரை அழைக்கிறார். சித்தி, மாமன்கள் எல்லாம் அவரது அம்மாவை அக்கா என்று அழைப்பதால் இவரும் அப்படியே கூப்பிட ஆரம்பித்துவிட்டாராம்.

சகோதரர்கள்: ராஜூசுந்தரம் (அண்ணன்),நாகேந்திர பிரசாத் (தம்பி).

டான்ஸ் குருக்கள்: தர்மராஜ் மாஸ்டர் (பரதநாட்டியம்) உடுப்பி லட்சுமி நாராயணன் மாஸ்டர்.

முதன் முதலில் மேடையில் தோன்றியது: 11 ஆவது வயதில்

உதவி டான்ஸ் மாஸ்டராக: அப்பா  சுந்தரம் மாஸ்டரிடம்.

கோரியோகிராஃபிக்கு தேசிய விருது: மின்சார கனவு (வெண்ணிலவே…மற்றும் ஸ்ட்ரோபெரி கண்ணே…பாடல்களுக்காக), லக்ஷ்யா (ஹிந்திப் படம்)

முதன் முதலில் (16 வயதில்) நடனம் அமைத்த படம்: கமலின் ‘வெற்றிவிழா’ (தத்தோம் ததாங்கு தத்தோம்…)

நடனப்பள்ளி: 2010இல் சிங்கப்பூரில் நடனப்பள்ளி தொடங்கியிருக்கிறார்.

முதன் முதலில் திரையில் தோன்றிய பாட்டு: (மௌனராகம்) படத்தில் ‘பனிவிழும் இரவில்….’ பாடலில் புல்லாங்குழல் வாசிக்கும் பையனாக வந்து போவார்.

முதன் முதலில் பேக்ரவுண்ட் டான்சராக: அக்னி நட்சத்திரம்.

பாடகராக: சுயம்வரம், உள்ளம் கொள்ளை போகுதே.

தேசிய விருது சந்தோஷம்: முதன் முதலில் தேசிய விருது வாங்கியதும் அதை தனது பரதநாட்டிய மாஸ்டர் தர்மராஜிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவரோ ‘விருதுகளெல்லாம் வரும் போகும். உன் வேலையை சரியாகச் செய்’ என்று கூறியிருக்கிறார். பிரபுதேவாவின் தன்னடக்கத்திற்கு இந்த சம்பவமும் ஒரு காரணம் என்கிறார்கள்.

முதல் சம்பளம்: ரூ. 500. மணிரத்னம் கையால் வாங்கியிருக்கிறார். அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தார்.

திரை நடனத்தில் டேர்னிங் பொயின்ட்: ஊர்வசி…ஊர்வசி, முக்காலா முகாப்லா பாடல்கள்.

நடித்த குறும்படம்: பரரம்பா (சந்தோஷ் சிவன் இயக்கியது)

முதல் வீடியோ எல்பம்:  ‘It is boring’

பொலிஸி: ரிகர்சஸில் ஃபிக்ஸ் பண்ணும் ஸ்டெப்களில் 90 சதவிகிதம் ஷூட்டின்போது மாறாமல் இடம்பெறும்.

ஹீரோவாக உயர்த்திய பாட்டு: ‘சூரியன்’ படத்தில் இடம்பெற்ற ‘லாலாக்கு டோ டப்பிமா..’ வில் பவித்ரன் இம்ப்ரஸ் ஆகி, ‘இந்துவில்’ ஹீரோவாக்கினார்.

சகோதரர்களுடன் இணைந்து நடித்த படம்: 123 (2002).

நடிகராக அறிமும்: இந்து

நடிகராக முதல் திருப்புமுனை: காதலன்

முதன் முதலில் ஒரு முழுப் பாடலுக்கு ஆடியது: ‘இதயம்’ (ஏப்ரல் மேயிலே…), ‘ஜென்டில்மேன்’ (சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு…), ‘வால்டர் வெற்றிவேல்’ (சின்ன ராசாவே…)

தெலுங்கில் டான்ஸராக விசிட்டிங் கார்ட்: அத்தைக்கு யமுடு அம்மாயிக்கு மொகுடு.

தயாரித்த படங்கள்: தேவி, போகன், சம்டைம்ஸ், வினோதன்.

இயக்குநராக அறிமுகம்: ‘நூவ் ஒஸ்தானன்டே நேனோதானன்டா…’ (தமிழில் இதை மோகன்ராஜா ‘உனக்கும் எனக்கும்’ என ரீமேக் செய்தார்)

பாடலாசிரியராக: சார்லி சாப்ளின் 2 (இவளா இவளா), தேவி 2 (சொக்குற பெண்ணே), யங் மங் சங்.

சென்டிமென்ட்: இயக்கும் படத்தில் முதலில் பாடலை ஷூட் செய்துவிட வேண்டும் என விரும்புவார்.

விருப்பமான கலர்: மஞ்சள்.

உதவியாளர்களில் இயக்குநரானவர்கள்: பொன்மாணிக்கவேல், ஏ.சி.முகில் செல்லப்பன், எல்.கே.ஜி. பிரபு.

பிடிக்காதது: சிபாரிசு

வாவ்வ்: எந்தப் பாடலாக இருந்தாலும் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் கோரியோகிராஃப் செய்து கொடுத்து விடுவார்.

மெனு கார்ட்: சைவப் பிரியர். ரைஸ் குறைவோ குறைவு. காய்கறி, பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வார். அப்பளம் என்றால் இஷ்டம்.

ரிலாக்ஸ்: தனது குழந்தைகளுடன் அமர்ந்து செஸ் விளையாடுவது பிடிக்கும்.

‘மின்சாரக் கனவு’ படத்தில் பிரபுதேவாவிற்காக டப்பிங் பேசியவர்: விக்ரம்

முதன்முதலில் வாங்கிய காஸ்ட்லி ஷூ: அபெக்ஸ் ஷூ. அதை ‘அக்னி நட்சத்திரம்’ ‘ராஜாதி ராஜன் இந்த ராஜா…’ பாடலில் ஆடும்போது கூட பயன்படுத்தியிருப்பார்.

சந்தோஷம்: மைக்கல் ஜெக்சனை மும்பையில் சந்தித்து மகிழ்ந்தது.

சிறப்பு: மும்பையின் Lonavala wax museumத்தில் இவரது மெழுகு சிலை உள்ளது.

அடிக்கடி பார்த்து ரசித்த பாடல்: ‘காதல் பரிசு’வில் வரும் ‘கூக்கூ….என்று குயில் கூவாதோ…’பாடல். ‘அந்தப் பாட்டு படமானப்ப என் குரு தர்மராஜ் மாஸ்டரும் உடன் இருந்தார். பாட்டோட சரணத்தில் ‘கூந்தல் பாய் போடு…தோளில் கை போடு..கண்ணில் மை போட்ட மானே’ னு வரிகள் வரும்.

அந்த இடத்துக்கு அப்பா (சுந்தரம் மாஸ்டர்) என்னை ஸ்டெப் போடச் சொன்னாங்க. அப்ப நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டு இருந்ததால, அந்த பாணில மூவ்மெண்ட் போட்டேன். கமல் சார் உடனே ‘ரெடி மாஸ்டர்’னு அப்பா கிட்டச் சொல்லி அதை அவர் தன் ஸ்டைல்ல ஆடினார். நமக்குனு ஒரு ஸ்டைல் வச்சிக்கணும்னு நான் உணர்ந்த தருணம் அது…” என்கிறார்.

உதவியாளர்களில் டான்ஸ் மாஸ்டர் ஆனவர்கள்: ராகவா லோரன்ஸ், விஷ்ணு தேவா (பொலிவுட்)

தமிழில் அடுத்தது: யங் மங் சங், பொன்மாணிக்கவேல், ஊமை விழிகள், தேள், பஹிரா (55 ஆவது படம்)

 

 

 

 

You must be logged in to post a comment Login