Fashion

CROSS SHOULDER LINE BLOUSE

By  | 

அடிப்படை அளவுகள்:

Blouse இன் நீளம் – 28

தோற்பட்டை – 7

கழுத்து அகலம் – 5

கழுத்து ஆழம்

Front – 5.5

Back – 1.5

Armhole – 14

Armhole இல் இருந்து இடை வரையான அளவு – 14

கீழ் கரை அகலம் – 29 + 2 = 31

Open பின் கழுத்து அழத்திலிருந்து – 6

 

SHOULDER LINE

தோற்பட்டை – 3.5

கரையிலிருந்து 2 அங்குலம் மேல் நோக்கி குறித்து SHOULDER LINE ஐ வளைவாக கரை பகுதியில் குறிக்கப்பட்டுள்ள புள்ளியில் இணைக்கவும்.

வெட்டும் முறை:

Blouse இணை தைப்பதற்காக எடுத்துக் கொண்ட துணியை இரண்டாக மடித்து கொள்ளுங்கள்.

முதலில் Blouse இன் Back பகுதியினை வெட்டிக் கொள்வோம்.

  1. தோற்பட்டையில் இருந்து கரை பகுதி வரையான அளவினை குறித்துக் கொள்ளுங்கள்.
  2. இனி கழுத்து மற்றும் கை பகுதியின் அளவுகளை குறித்துக் கொள்ளுங்கள்.
  3. கழுத்து பகுதிக்கான அளவினை குறிக்கும்போது கழுத்து பகுதி Open இன் அளவுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.
  4. குறித்துக் கொண்ட கை மற்றும் கழுத்து பகுதியின் வளைவுகளை சீராக இணைத்து Armhole இல் இருந்து கீழ் கரை வரையான அளவினை அடையாளமிட்டு அதனை படத்தில் காட்டியுள்ளவாறு கரை பகுதி அளவிலிருந்து வெளி நோக்கி ஒரு அங்குலம் குறித்து இணைத்துக் கொள்ளுங்கள்.
  5. கரை பகுதியினை வளைவாக வரைந்துக் கொள்ளுங்கள்.

Front பகுதி

  1. Front பகுதிக்கான அளவினை குறிக்கும் முன்பு துணியை மடிக்காது விரித்தே வைத்துக் கொள்ளுங்கள்.
  2. ஏற்கெனவே குறித்து வைத்துள்ள Back பகுதியின் அளவுகளை போன்று குறித்துக் கொள்ளுங்கள்.
  3. அவ்வாறு குறித்துக் கொள்ளும்போது எந்த தோற்பட்டையில் லைன் வரவேண்டும் என விரும்புகின்றீர்களோ அந்த தோற்பட்டையில் படத்தில் காட்டியுள்ளவாறு 3.5 என குறித்துக் கொள்ளுங்கள்.
  4. Frock இன் Front இன் அளவுகளை குறிப்பதற்கு முன்னர் தோற்பட்டையிலிருந்து இடை வரையான அளவினை தையல் இடைவெளியுடன் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி மீதமுள்ள துணியில் சுருக்கத்திற்கான நீள் பட்டிகளை வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை:

  • முதலில் Blouse இன் Back Open ஐ தைத்துக் கொள்ளுங்கள்.
  • சுருக்கப் பகுதிக்கான நீள் பட்டியின் கரை பகுதியினை சிறிய மடிப்பாக மடித்துத் தைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் SHOULDER LINE பகுதியில் தைத்து வைத்துள்ள நீள் பட்டினை வைத்து சுருக்கி தைத்துக் கொள்ளுங்கள்.
  • தைத்து முடித்ததும் தோற்பட்டை லைனை இணைத்துக் கொள்ளுங்கள்.
  • தோற்பட்டையை இணையுங்கள்.
  • கழுத்து மற்றும் கை பகுதியின் கரையை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
  • Side ஐ இணையுகள்.
  • இனி தைத்து முடித்த Skirt பகுதியை Blouse பகுதியுடன் இணையுங்கள்.
  • கீழ் கரை பகுதியில் நீள் பட்டி வைத்து தைத்துக் கொள்ளுங்கள்.
  • Open பகுதிக்கு பட்டன் வைத்து தைத்துக் கொள்ளங்கள்.

-ஜெ. கலைவாணி

You must be logged in to post a comment Login