
Cookery
Garlic Chicken
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக்ஸ் – பத்து
வெங்காயம் – இரண்டு
வெ.பூண்டு – ஆறு பற்கள்
க.பட்டை தூள் – கால் தேக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் – ஒன்றரை கோப்பை
காய்ந்தமிளகாய் – 4
உப்புத்தூள் – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைகேற்ப
கொத்தமல்லி – ஒரு பிடி
புளி பேஸ்ட் – 2 தேக்கரண்டி
லெமன் கிராஸ் – ஒன்று
மீன் சோஸ் – 2 மேசைக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை – கால் கோப்பை
பீனட் பட்டர் – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
- முதலில் சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.
- காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும் .
- லெமன் கிராஸ்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும் .
- கொத்தமல்லியை நறுக்கி வைக்கவும்.
- வறுத்த வேர்க்கடலையை பொடியாக நசுக்கி வைக்கவும்.
- பின்னர் வெ. பூண்டு, வெங்காயம், லெமன்கிராஸ், கொத்தமல்லி ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளவும்.
- அதில் புளி பேஸ்ட்டையும், க.பட்டை தூளையும் போட்டு கலக்கி வைக்கவும்.
- அடிகனமான சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சிக்கன் லெக்ஸ்ஸை போட்டு வதக்கவும்.
- அடிப்பிடிக்காமல் சிவக்க வதக்கியதும் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே எண்ணெயில் தயாரித்துள்ள வெ. பூண்டு பேஸ்ட்டை போட்டு வதக்கவும்.
- நன்கு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி விட்டு சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கலக்கி விடவும்.
- பின் அதில் வதக்கி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்க விடவேண்டும்.
- அடுப்பின் அனலை குறைத்து வைத்து அரைமணி நேரம் வேக வைக்கவும்.
- பின்னர் மீன் சோஸ் மற்றும் பீனட் பட்டைரை போட்டு நன்கு கலக்கி விட்டு மேலும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்திருக்கவும்.
- அதன் பின்னர் கோழி நன்கு வெந்தவுடன் உப்பையும், மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கி இறக்கி விடவும்.
- இறுதியாக வேர்க்கடலையை தூவி விட்டு சூடாக பரிமாறவும்
சுவஸ்த்திக்கா ரெங்கராஜ்,
கலஹா.
You must be logged in to post a comment Login