Sewing

MASK தைப்பது எப்படி?

By  | 

இன்று பலரும் சுவாசக் கவசங்களை அணிவதால் சந்தையில் சுவாசக்கவ சங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால் உலகளாவிய ரீதியில் இராணுவத் தினரும் தாதியர்க ளும் சுவாசக் கவசங்கள், பாதுகாப்பு கையுரைகள், சுத்திகரிப்பான திரவம் போன்றவற்றை தயாரிக்க ஆரம்பித் துள்ளனர்.
எனினும், கொவிட் – 19 கிருமி தொற்றினை தடுக்க சுவாசக் கவசங் கள் அவசியமில்லை. கைகளை முறையாகக் கழுவினாலே போதும் என வைத்திய நிபுணர்கள் கூறினாலும் கூட சில தரப்பினர் பாதுகாப்புக்காக சுவாசங்களை அணியும்படி வலியுறுத்துகின்றது.
இன்றைய நிலையில் சுவாசக் கவசங்களை கடைகளில் தேடி வாங்குவது கடினம் என்பதால் நீங்களே உங்களுக்கான சுவாசக் கவசம் ஒன்றினை வீட்டிலேயே தைத்துக்கொள்ளுங்கள்.

Mask – 01

இதனை தைப்பதற்கு சுத்தமான கொட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.

அடிப்படை அளவுகள்:
நீளம் – 19 cm
அகலம் – 17 cm
மடிப்பு – 3 cm
முறையாக – 4 cm, 3 cm, 3 cm, 3 cm, 4 cm
Elastic

வெட்டும் முறை:

  • துணியை இரண்டாக மடித்து படத்தில் காட்டியுள்ளவாறு அளவுகளை குறித்துகொள்ளுங்கள்.
  • குறித்த அளவின் அடிப்படையில் இரண்டு பகுதிகளை (Leyar) வெட்டிக்கொள்ளுங்கள்.
  • Mask ஐ காதில் மாட்டுவதற்கு அளவாக Elastic இனை வெட்டிக்கொள்ளுங்கள்.

தைக்கும் முறை:

  • முதலில் வெட்டிக்கொண்ட பகுதியை ஒன்றின் ஒன்றை வைத்து நீள் கரை பக்கமாக தைத்துக்கொள்ளுங்கள்.
  • தைத்த பகுதியை சரியான பகுதிக்கு மாற்றி அதன் கரைiயில் நூல் ஓடிக்கொள்ளுங்கள்.
  • பின்னர் படத்தில் காட்டியுள்ள அளவுகளுக்கேற்ப மடிப்புகளை மடித்து அயன் செய்து குண்டூசியால் குத்திக்கொள்ளுங்கள்.
  • இனி குண்டூசி குத்தப்பட்ட மடிப்பை ஓரமாக நூல் ஓடிக்கொள்ளுங்கள்.
  • பின்னர் Elastic ஐ அளவாக வெட்டி கரைப் பகுதியில் வைத்துதைத்து பின்னர் அப்பகுதிக்கு நீள்பட்டி ஒன்றினை வைத்து தைத்து மடித்து தைத்துக்கொள்ளுங்கள்.

-ஜெ. கலைவாணி

You must be logged in to post a comment Login