
Fashion
YOKE CUT BLOUSE
அடிப்படை அளவுகள்:
Blouse இன் நீளம் – 56
தோற்பட்டை – 10
Armhole – 20.5
கழுத்து அகலம் – 6
கழுத்து ஆழம்
Front – 7
Back – 2
கீழ் கரை
Front – 6 + 22.5 + 4 =32.5
Back – 1.5 + 4.5 + 22.5 + 4 = 32.5
Yoke Cut
Front – கழுத்து ஆழம் குறிக்கப்பட்டுள்ள புள்ளியிலிருந்து கீழ் நோக்கி 1.5அங்குல அளவு புள்ளியை குறித்து அந்த புள்ளியிலிருந்து Armhole பக்கமான நீள் கோடு ஒன்றினை வரைக.
Back – மேலே குறிப்பிட்டது போல கழுத்து ஆழம் குறிக்கப்பட்டுள்ள புள்ளியிலிருந்து கீழ் நோக்கி 15 அங்குலம் அளந்து அடையாளம் இட்டுக் கொள்ளுங்கள்.
பின் Armhole பகுதியில் தோற்பட்டை கையுடன் இணையும் புள்ளியில் இருந்து கீழ் நோக்கி 10 அங்குலம் குறித்து கொள்ளுங்கள்.
பின்னர் ஏற்கெனவே கழுத்து பகுதிக்கு கீழ் குறிக்கப்பட்டுள்ள புள்ளியில் இருந்து Armhole பகுதியில் குறிக்கப்பட்டுள்ள புள்ளியை படத்தில் காட்டியுள்ளவாறு நீள் கோடு ஒன்றினால் இணையுங்கள்.
Front – மடிப்பு
Yoke cut குறிக்கப்பட்டுள்ள புள்ளியில் இருந்து முன் நோக்கி 6 அங்குலம் குறித்துக் கொள்ளுங்கள்.
அவ்வாறு குறித்துக் கொண்ட புள்ளியை படத்தில் காட்டியுள்ளவாறு 3”, 2” ஆக குறித்துக் கொள்ளுங்கள் பின்னர் தொடர்ந்து 2” அங்குலங்களாக குறித்துக் கொள்ளுங்கள்.
Back – மடிப்பு
மடிப்பிலிருந்து 1.5 ஐ குறித்து அந்த புள்ளியிலிருந்து 4.5 குறித்துக் கொள்ளுங்கள்.
Collar Leaf
கழுத்து சுற்றளவு – 17.5
அகலம் – 5
Collar முனை – 0.5
Collar Band
கழுத்து சுற்றளவு – 17.5
அகலம் – 2.5
Collar வளைவு – 2.5
வெட்டும் முறை:
Blouse தைப்பதற்கு எடுத்தக் கொண்ட துணியை இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள்.
மடித்துக் கொண்ட துணியின் முனையிலிருந்து கழுத்து அகலத்தை குறித்து அந்த புள்ளியிலிருந்து Blouse இன் நீளத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
இதற்கமைய அளவுகளை குறித்து முதலில் சுருக்க பகுதிகளை வெட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் Yoke cut பகுதியினை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.
இனி மீதமுள்ள துணியில் Collar பகுதியினை வெட்டிக் கொள்ளுங்கள்.
தைக்கும் முறை:
முதலில் Collar Leaf பகுதியினை தைத்து அதனை Collar Band வுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் முன் பக்க மடிப்புகளை மடித்து அயன் செய்து தைத்துக் கொள்ளுங்கள்.
இதேபோன்று பின் பக்க மடிப்பினையும் தைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக Yoke cut பகுதியுடன் தைத்து வைத்த பகுதியினை இணையுங்கள்.
முன் Open பகுதியினை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
தோற்பட்டையினை இணையுங்கள்.
தைத்து வைத்த Collar இணை கழுத்து பகுதியுடன் வைத்து தைத்துக் கொள்ளுங்கள்.
கை பகுதியினை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
Side இணை இணையுங்கள்.
கீழ் கரையினை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக முன் பக்க Open பகுதியில் பட்டன் வைத்து தைத்துக் கொள்ளுங்கள்.
இதே போன்று பின் பக்கமும் பட்டன் வைத்து தைத்துக் கொள்ளுங்கள்.
ஜெ. கலைவாணி
You must be logged in to post a comment Login