Covid 19

அமெரிக்காவில் ஒருவருக்கு ஒமிக்ரோன்

By  | 

அமெரிக்காவில் ஒருவருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்குமோ என்ற கேள்விக்கு இதுவரை எந்தவொரு மருத்துவ விஞ்ஞானியும் உரிய பதில் அளிக்கவில்லை. இருப்பினும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்க வந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரோன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த 10 க்கும் மேற்பட்டோரை சோதித்ததில் யாருக்கும் ஒமிக்ரோன் கோவிட் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது.

ஒமிக்ரோன் பாதிப்பு குறித்து அமெரிக்க சுகாதார துறை அதிகாரி அந்தோணி பவுசி நிருபர்களிடம் கூறுகையில்: பாதிப்பு குறித்து உறுதி செய்துள்ளோம். இன்னும் நாம் பரவாமல் தடுக்க ஏற்கனவே கடைபிடித்த சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முழு அளவில் பின்பற்ற வேண்டும். மாஸ்க் வீட்டுக்குள்ளும் அணிவது மிக நல்லதுதான். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தொரிவித்துள்ளார்.

 

You must be logged in to post a comment Login