Food

ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

By  | 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உள்ள ஆறு சுவைகளில் உப்பை நம்மை அறியாமலேயே அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது உடலுக்குத் தேவையான உப்புச் சத்தின் அளவைவிட அதிக அளவு உப்பு நமது உடலில் தங்கு­கிறது. அதிக உப்பு, சத்தமில்லாமல் உயி­ரைக் கொல்லும்.


சீனி உடல் நலத்துக்குக் கேடு என்று தவிர்க்கும் பலரும் உப்பினால் ஏற்படும் ஆபத்தை உணர்வதில்லை. உப்பை எவ்வளவு அதிகம் எடுத்துக் கொள்கி­றோமோ, அவ்வளவு சீக்கிரம் மரணம் நம்மை நெருங்கிவிடும் என்கிறது சமீபத்­திய ஆய்வு. உணவில் கூடுதலாகத் தூவும் உப்பு, மரணத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. உணவில் உப்பு சேர்ப்பது உடலில் எத்தகைய விளைவுகளை உண்டு­பண்­ணும் என்பதை அறிய 500,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வு பற்றிய ஒரு கட்டுரையை ஐரோப்பிய ஹார்ட் ஜேர்னல் வெளியிட்டது.
அந்த ஆய்வில், உப்பை எந்த அளவு அதிகம் உண­வில் சேர்க்கிறோமோ அந்த அளவு மரணம் நம்மை நெருங்குகிறது. அதிக உப்பு மனிதனின் ஆயு­ளைக் குறைக்கும், உணவில் கூடு­தல் உப்பைச் சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறக்கின்றனர். எனவே நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் உணவில் உப்பை குறைப்பது மிகவும் நல்லது. உப்பு அதிகமானால் இரத்த அழுத்தம் அதிக­மாகிறது. அதனால் மாரடைப்பு, பக்க­வாதம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம்.
உப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வயிற்­றுப்புண், இதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக்கல் பாதிப்புகள் ஏற்படும். இரத்தத்திலும் உப்புச்சத்து அதிகரிக்கும். எலும்பின் அடர்த்தியும் குறையும். சில நோய்கள் தாக்கும்போது உப்புச்சத்து அதிகரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு.
அதிக உப்பு, இரத்த நாளத்­தின் உட்புறம் கொழுப்பாகப் படிகிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரைநோய், சிறு­நீரக நோயால் பாதிக்­கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பொது­வாக நாம் உண­வுக்காக எடுக்கும் உப்பின் அளவை பாதியாகக் குறைத்­தால் இரத்த அழுத்த­மும் குறையும்.
உப்பில் இருக்கும் இரசாயன சத்துகள் நமது உடலில் நீர்ச்­சத்து, இரத்தத்தின் அளவு குறை­யாமல் பாதுகாக்கிறது. இதயம் சீராக செயல்பட மிக­வும் உதவுகின்றன. என்றா­லும் உப்பின் அளவு அதிகரிக்­கும்போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. உடலில் உப்பு கூடும்போது கல்சியம் இயல்பாகவே குறையும்.
உப்பை குறைவாகச் சாப்பிடும் நபர்களோடு, உப்பை அதி­கம் சாப்பிடும் நபர்களை ஒப்பிட்டுச் செய்த ஆய்வில், உப்பை குறைத்­துப் பயன்படுத்திய­வர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததும் உப்பை அதிகம் பயன்படுத்தியவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டதும் முன்கூட்டியே இறப்பதும் தெரிய வந்திருக்கிறது. உண­வில் உப்பின் அளவைக் குறைப்பது இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
எனவே சாப்பிடும்போது உப்பை அளவோடு சேர்ப்பதே உடல் நலத்துக்குச் சிறந்தது. உப்பு அதிகமுள்ள உணவு­களைத் தொடாதீர்கள். குறிப்பாக பதப்­படுத்தப்பட்ட உணவுகளில் உப்புச்சத்து அதிகமிருக்கும் என்ப­தால் அவற்­றைத் தவிருங்­கள். உப்பைக் குறைத்து உங்கள் வாழ்நாளில் அதிக வருடங்களைச் கூட்டிக் கொள்ளுங்கள்.

You must be logged in to post a comment Login