Antharangam

இந்த நிலை ஆபத்தானது!

By  | 

கேள்வி:
எனக்கு வயது 29. நான் ஒரு ஆண். எனக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இப்போதும் நான் கைத்தொலைபேசியில் ஆபாசப் படம் பார்க்கிறேன். அதைப் பார்த்து சுய இன்பம் கொள்கிறேன். இதனால் எனது ஆண்மைக்கு ஏதேனும் குறைபாடு ஏற்படுமா?

பதில்:
நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஆண்கள் தங்கள் உடற்றகுதிக்கு ஏற்ற அளவிலேயே தமது உயிர்ச்சத்தை வெளியிட வேண்டும். ஆயினும் சிலர், அலாதியான ஆர்வத்தில் அதை அளவுக்கு அதிகமாக வீணடித்துவிடுகின்றனர். இதனால் உடற்சோர்வு என்பன ஏற்படலாம். என்றாலும் அது அவரவர் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

ஆண்மைக்குக் குறைவு வருமோ, வராதோ… உங்கள் மனைவியின் பெண்மைக்குக் குறைவு நிச்சயமாக ஏற்படும். அதாவது, நீங்கள் உங்கள் தாபத்தைத் தணித்துக்கொள்ள இந்த முறையைக் கையாள்கிறீர்கள். இதனால், உங்கள் மனைவியின் தாம்பத்தியத் தேவையைக் கவனித்துக்கொள்ள உங்களுக்கு விருப்பம் ஏற்படாமல் போகலாம்.

நீங்கள் திருமணமானவர் என்கிறீர்கள். அதுவும் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது என்கிறீர்கள். எனின், நீங்கள் உங்கள் இன்பத்தை உங்கள் மனைவியுடனேயே பகிர்ந்து கொள்ளலாமே? இன்னும் ஏன் தனிமையிலேயே இனிமை காண விழைகிறீர்கள்?

உங்களுக்கு விருப்பமில்லாத திருமணமோ (இந்தக் காலத்தில் அப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு), மனைவி ஒத்துழைக்க மறுப்பதோ அல்லது மனைவி நோய்வாய்ப்பட்டுவிட்டமையோ இதற்குக் காரணமாக இருந்தால் உங்கள் செயலில் கிஞ்சித்தேனும் நியாயம் இருக்கலாம். ஆனால், இந்த மூன்றில் எது ஒன்றாகவும் இல்லாமல் இருந்தால், நீங்கள் சுய இன்பத்துக்கு அடிமையாகிவிட்டவர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை ஆபத்தானது.

ஏன் ஆபத்தானது என்றால், ஒருவர் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதை அளவறிந்து உபயோகிக்க மாட்டார். நிச்சயமாக அது நாளாக நாளாகக் கூடிக்கொண்டே செல்லும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், உங்கள் ஆண்மைக்கு மட்டுமன்றி, உங்கள் ஆரோக்கியத்துக்கே பெரும் கேடு விளையலாம்.

ஒருவேளை, உடலின்பத்தின்பால் உங்களது ஆர்வம் அதீதமாக இருப்பதுகூட உங்கள் மனைவி ஒத்துழைக்க மறுப்பதற்குக் காரணமாகலாம். ஆனால் நீங்கள் பொறுமையாக நடந்துகொண்டால், நீங்கள் விரும்பும்போதெல்லாம் உங்கள் மனைவி பச்சைக்கொடி காட்ட வாய்ப்புகள் அதிகம்.

எனவே, புது மாப்பிள்ளையான நீங்கள், மனைவியுடன் இணைந்து இன்பம் காணத் தொடங்கினால் உங்கள் இருவருக்கும் அது பெரும் பயனைத் தரும்.

 

You must be logged in to post a comment Login