Cinema

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கானக்குயில் சுவர்ணலதா அம்மா

By  | 

குயில் பறந்தாலும் விட்டுச்செல்லும் நினைவுகள் காலம் காலமாய் நிலைத்திருக்கும்.

எனக்கு விருப்பமான பாடல்கள் ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு “சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா…” – நீதிக்குத் தண்டனை

“மாலையில் யாரோ மனதோடு பேச…” – சத்ரியன்

“குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” – என் ராசாவின் மனசிலே

“என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” – வள்ளி

“என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி”- உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

“போவோமா ஊர்கோலம்” – சின்ன தம்பி

“காதலெனும் தேர்வெழுதி” – காதலர் தினம்

“போறாளே பொன்னுத்தாயி” – கருத்தம்மா

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்” – அலைபாயுதே.

என அவர் பாடிய பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். இனிமையான குரலுக்கு சொந்க்காரர். அவரின் இறப்பு இசை உலகின் பேரிழப்பு.

“மூடிவச்சி மூடிவச்சி மறச்சி வச்சதெல்லாம் காத்த அடிச்சி காத்த அடிச்சி கலஞ்சி போனதென்ன…” இதை ஒரு டூயட்டுடன் ஒப்பிட முடியுமா? முடியும் இவர் குரலில் ஒலித்தால் மட்டும்.

“ஒரு பாடகி.. பாடகி மட்டும்தான். இசையை தவிர வேறொன்றும் தெரியாத தேவதை… தனகென்று குடும்பம், குழந்தை என எதையும் ஏற்படுத்தி கொள்ளாமல் இசைக்காகவே பிறந்து இசையிலேயே வாழ்ந்து இசையோடு தன்னை மறித்து கொண்டவர் சுவர்ணலதா….

மிக குறுகிய  காலத்தில்  7 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியவர் … தமிழ், தெலுங்கு, மலையாளம்,  ஹிந்தி, மராத்தி, ஒரியா, கன்னடம்,  உருது, படுகா போன்ற எண்ணற்ற  மொழிகளில் பாடிய பெண் தேவதை.

ஏதோ ஒரு தியானம் போல் இன்றும் நாள் முழுவதும் அந்தக் குரலையே  காதலித்துக்கொண்டிருக்கலாம் அவ்வளவு இனிமை  எல்லாப் பாடல்களிலும் அந்தக் குரல் என்னன்ன மாயாஜாலம் செய்கிறது.

குயில் பறந்தாலும் விட்டுச்செல்லும் நினைவுகள் காலம் காலமாய் நிலைத்திருக்கும்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே … அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காணகுயில்  சுவர்ணலதா   அம்மா.

ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்.

ருவன்வெல்ல-ரொஷான்,
இலங்கை தமிழன்

You must be logged in to post a comment Login