General

இன்று தந்தையர் தினம்

By  | 

தாய் தன் பிள்ளைகளை கருவில் சுமந்தார். தந்தை என்பவரோ தன் ஆயுள் வரை அவர்களை மனதில் சுமக்கிறார்.

இன்று தந்தையர் தினம். தந்தையின் ஒப்பற்ற தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிள்ளையினும்  முதல் ஹீரோ அப்பாதான்… அந்த அப்பா என்ற உறவுக்கு நிகர் அப்பா மட்டுமே!

இப்படியான தந்தையர் தினம் எவ்வாறு உருவானது என்று பார்ப்போம்:

அமெரிக்காவில் 1909இல் வொஷிங்டனைச் சேர்ந்த ‘சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்’ என்ற இளம் பெண், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

இவரது தாய், தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தாயின் மறைவுக்கு பின் தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் இத்தினத்தை கொண்டாடும் எண்ணத்தை அவருக்கு துாண்டியது. இதன்படி 1910இல் அமெரிக்காவில் இத்தினம் தொடங்கப்பட்டது. 1966இல் அங்கீகரிக்கப்பட்டது.

1972இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login