Articles

இறுக்கமாக ப்ரா அணிந்தால்…

By  | 

கருத்தடை மாத்திரை மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?
அந்த அபாயம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதை தவிர்ப்பார்கள். இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அதிகப்படுத்திவிடலாம். இவர்கள் மாத்திரைகளை தவிர்த்துவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மற்ற கருத்தடை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுக்கமாக ப்ரா அணிந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுமா?
இறுக்கமான ப்ரா மற்றும் அண்டர் வொயர் ப்ராவால் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறதா என்று நிறைய பெண்கள் கேட்கிறார்கள். இறுக்கமான ப்ராக்களை தொடர்ந்து அணிந்தால், மார்பகங்களில் இரத்த ஓட்டம் தடைப்படுகிற பிரச்சினை வரும். இதனால் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. பொதுவாக, சீரான இரத்த ஓட்டம் தடைப்படும் வகையிலான ப்ரா அணிவதை தவிர்ப்பது நல்லது.

 

 

You must be logged in to post a comment Login