General

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

By  | 

அங்கொடடையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

பெண் குழந்தைகள் மூவரையும்  ஆண் குழந்தைகள் மூவரையும் அவர் பிரசவித்துள்ளார்.

அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய  பெண் ஒருவர் பிரசவத்துக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 6 குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

பேராசிரியர் ரிடான் டயஸின் தலைமையில் இடம்பெற்ற சிஸேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.

தாயும் 6 குழந்தைகளும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் இரண்டாவது பிறந்த குழந்தை மாத்திரம் தற்போது வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

You must be logged in to post a comment Login