General

ஈராக் கொரோனா மருத்துவமனையில் தீ: 44 பேர் பலி

By  | 

ஈராக்கில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியாகினர்.

ஈராக்கின் தெற்கு நகரான நஸரியாவில் உள்ள அல் ஹுஸைன் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 44 நோயாளிகள் பலியானதுடன் மேலும் 67 பேர் தீவிரமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்சிசன் டேங்க் வெடித்துச் சிதறியதில் இந்த தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெறுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஒட்சிசன் டேங்க் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதாரத் துறை பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login