General

உசைன் போல்ட் மகள் ‘ஒலிம்பியா லைட்னிங்’

By  | 

உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் (மின்னல்) என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஜமேக்கா தடகள வீரர் உசைன் போல்ட் (வயது 33). உலகின்  மின்னல் வேக  மனிதன், தடகள உலகின் மன்னன் என்று போற்றப்படும் இவர், 100, 200 மீ., ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர். ஒலிம்பிக்கில் 8 தங்கம் கைப்பற்றியுள்ள இவர், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 11 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக்கில் (2008, 2012, 2016), 100 மற்றும் 200 மீ., ஓட்டத்தில்  ஹெட்ரிக்  தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். கடந்த 2017 உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்குப் பின் தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

உசைன் போல்ட்டின் நீண்ட நாள் காதலி காசி பென்னெட். இவர்களுக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை ஜமேக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹால்னஸ்  டுவிட்டரில் உறுதி செய்திருந்தார்.காசி பென்னெட்டின் பிறந்த நாளான ஜூலை 7ஆம் திகதி போல்ட், தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக  டுவிட்டரில் பதிவிட்டார். அவரது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் போல்ட் என்று பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து போல்ட் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

 

எனது காதலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்கள் மகள் ஒலிம்பியா லைட்னிங் உடன் புதிய அத்தியாயத்தை துவங்கினோம்.

 

You must be logged in to post a comment Login