General

உலகம் முழுவதும் தற்போது 1 கோடி கொரோனா நோயாளிகள்

By  | 

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.37 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3.21 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 11 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,37,76,587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,21,79,748 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,64,515 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,04,32,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 79,051 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 89,62,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,31,045 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் ஐந்தாவது இடத்தில் பிரான்ஸும் உள்ளன.

You must be logged in to post a comment Login