Women Achievers

சாதனைப் பெண்: உலக மக்களின் அன்னை

By  | 

இன்­றைய கால­கட்­டத்தில் பொது­வாக எல்லா துறை­க­ளிலும் பெண்கள் முத்­திரை பதித்­துள்­ள­தோடு எல்­லோ­ருக்கும் முன்மா­தி­ரி­யாக திகழ்­கின்­றனர் என்
­ப­தையும் மறுக்­க­மு­டி­யாது.

அந்த வகையில் நான் பார்த்து வியந்து மன­தார நேசித்த பெண்­மணி, எல்­லோரும் தங்கள் வாழ்க்­கையில் நாம் படிக்கும் பாடப் புத்­த­கமாய் சுவா­சிக்கும் பெண்­மணி, அன்பால் அனைத்து ஜீவன்­க­ளையும் அர­வ­ணைத்த பெண்­மணி, வழி­காட்டி அன்னை தெரேசா ஆவார்.

“எது­வுமே நிரந்­த­ர­மற்ற உலகில் உங்கள் கஷ்­டங்கள் மட்டும் எப்­படி நிரந்­த­ரமாகும்;
கவ­லையை விட்டு வாழ்க்­கையை வாழ தொடங்­குங்கள்…” என்று வாழ்க்­கையில் விரக்தி அடைந்த மனி­த­னுக்கும் வாழ வழி சொல்­லிய அன்னை தெரேசா கடந்­து­வந்த பாதைகள், ஆற்­றிய பணிகள் எல்லாம் எல்­லோருக்கும் ஒரு பாடப்­புத்­தகம்.

தான் வாழ்ந்த காலத்தை தனக்­கென வாழாது பிற­ருக்­காக வாழ்ந்து மடிந்த அன்னை 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி தென்­கி­ழக்கு ஐரோப்­பிய நாடான அல்­போ­னி­யாவில் பிறந்தார். இயற்­பெயர் ஆக்னஸ் கொன்­சகா பொஜாக்­சியு. சிறுவய­தி­லேயே மிகவும் திற­மை­யா­னவர். பள்­ளிப்­ப­டிப்பில் மாத்­தி­ர­மல்ல, இதர செயற்­பா­டு­க­ளிலும் நகைச்­சுவை உணர்­வோடு பேசு­வ­திலும் தன்­னி­க­ரில்­லா­தவர்.

பள்ளிப்பரு­வத்தில் துள்ளி விளை­யா­டிய அந்த 8 வயதில், மார­டைப்பால் தந்­தைக்கு நேர்ந்த இறப்பு இவரை பெரிதும் வாட்­டி­யது. அதன் பிறகு தாயின் அர­வ­ணைப்பில் அன்பும் அறிவும் ஊட்டி வளர்க்­கப்­பட்டார் அன்னை தெரேசா.

அவரின் தாய் நல்­ல­தொரு சேவை செய்யும் நற்­கு­ழந்­தையாய் தன் மகளை வளர்த்து ஆளாக்­கினார். 12ஆவது வயதில் சமூ­க­சேவை செய்­வதில் ஆர்வம் காட்­டினார் அன்னை. குறிப்­பாக ஊன­முற்­றோ­ருக்கு உத­வுதல், தேவா­ல­யங்­களில் பணி செய்தல், பள்ளி மாண­வர்­க­ளுக்கு உத­வுதல், மருத்­து­வ­ம­னையில் பணி செய்தல், எல்­லோ­ரோடும் ஆறு­த­லாக பேசுதல் போன்ற இன்­னோ­ரன்ன பணி­களை செய்ய ஆரம்­பித்தார்.

மக்கள் படு­கின்ற வேத­னை­க­ளையும் இன்­னல்­க­ளையும் அறிந்­து­கொண்ட இவர், ஒவ்­வொரு மனி­தனும் உணவு, உடை, உறையுள், ஆரோக்­கியம் என அனைத்­தையும் பெற்று சுபீட்­சமாய் வாழ சேவை­யாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தன்­னு­டைய 18ஆவது வயதில் வீட்­டாரின் சம்­ம­தத்­தோடு வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி நுரேட்டோ சகோ­த­ரி­க­ளுடன் இணைந்து சமூக சேவை­யாற்றத் தொடங்­கினார்.

“ஒரே தேவை சேவை” என பார­பட்சம் பாராமல் அனை­வ­ருக்கும் சேவை­யாற்ற வேண்டும் என நினைத்தார். அன்னை தெரேசா இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்த போது, அங்கு ஏழை எளிய மக்கள் பட்ட துன்­பங்­களைக் கண்டு மன­மு­டைந்தார். அம்­மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக சேவை­யாற்ற வேண்டும் என எண்ணி இந்­தி­யா­வி­லேயே தங்கி இந்­திய பிர­ஜை­யாகி சேவை­யாற்றத் தொடங்­கினார்.

‘தெரேசா மார்ட்டின்’ என்­ப­வரின் நினை­வாக தன் பெயரை தெரேசா என மாற்­றிக்­கொண்டார். உண­வின்றி தவிக்கும் மக்­க­ளுக்கு உண­வினை பெற்றுக் கொடுத்தார். ஊன­முற்­றோ­ருக்கு உடல், உள தேவை­களை அன்­பாக நிறை­வேற்­றினார். “எம் கடமை இறைப்­பணி செய்­வதே” என்­ப­தற்­கி­ணங்க தேவா­ல­யங்­களில் தொண்­டாற்­றினார். தேவா­ல­யங்­களின் ஊடாக மக்­க­ளுக்கு ஆன்­மிக சிந்­த­னையை ஊட்­டி­ய­தோடு பல நற்­செய்­தி­க­ளையும் கற்­றுக்­கொ­டுத்தார்.

அன்னை ஏழை மக்­க­ளுக்கு உண­வினை பெற்­றுக்­கொ­டுக்க காலை­யி­லேயே குளித்து கரு­மங்­களை ஆற்றி, இறை­வனை வணங்­கி­விட்டு எல்­லோ­ரி­டமும் யாசகம் பெறுவார். அப்­ப­டி­யொரு நாள் ஒரு கடைக்குச் சென்று முத­லா­ளி­யிடம் யாசகம் கேட்­ட­போது அந்த முத­லாளி தன் வாயிலே இருந்த வெற்­றிலை எச்­சிலை தெரே­சாவின் கையிலே துப்­பினார்.

அதைப் பெற்றுக்கொண்ட தெரேசா அவ­ரிடம் “நீங்கள் எனக்கு கொடுத்த பரி­சு­போதும். பசியால் வாடும் எம் மக்­க­ளுக்கு ஏதா­வது கொடுங்கள்” என சிரித்த முகத்­தோடு கூறினார். முத­லாளி வெட்கித் தலை ­கு­னிந்து ஏழை­க­ளுக்கு உதவ சிறு­தொகைப் பணத்தை அன்­னைக்கு கொடுத்தார். இந்­நி­கழ்வு தெரே­சாவின் பொறுமை, பணிவு, அன்பு, கருணை போன்ற பல விட­யங்­களை எடுத்­தி­யம்­பு­கி­றது.

ஏழை மாண­வர்­க­ளுக்கு கல்வி புகட்­டினார். பாட­சாலை அமைத் துக் கொடுத்தார். உடை, புத்­த­கங்கள் போன்ற இன்­னோ­ரன்ன தேவை­களை செய்­து­கொ­டுத்தார். 1948 ஏப்ரல் 12ஆம் திகதி ஆசி­ரியர் பணியில் இருந்து விலகி சமூகப் பணியை தொடர்ந்து செய்­து­வந்தார். அப்­போது அவ­ரிடம் இருந்த சொத்து ஐந்து ரூபா பணமும் மூன்று நீள நிறப் ­பு­ட­வையும் தான். அதன் பிறகு அவரின் சமூகப் பணி வெறு­மனே ஓர் இடத்தில் கிடந்­து­ வி­டாது உல­க­ளா­விய ரீதியில் பரந்­து­பட்டு காணப்­பட்­டது.

1950இல் “பிறர் அன்பின் பணி­யாளர்” என்ற மன்­றத்தை ஆரம்­பித்து அத­னூ­டாக சேவை செய்ய ஆரம்­பித்தார். காளிகன் என்ற இடத்தில், ‘நிர்மல் ஹிருதை’ என்ற முதியோர் இல்­லத்தை ஆரம்­பித்தார். 1955 செப்­டெம்பர் 23ஆம் திகதி ‘சிசு­பவன்’ என்ற இல்­லத்தை தொடங்­கினார். தொழு­நோ­யா­ளர்­க­ளுக்கு தொழுநோய் மருத்­து­வ­ம­னை­யினை ஆரம்­பித்தார்.

மேலும் “சிறைக்­கை­தி­களும் மனி­தர்­களே” என்­ப­தற்­கி­ணங்க அவர்­க­ளுக்கு அறி­வுரை கூறி மறு­வாழ்வு அளிக்கும் வழி­மு­றை­களை மேற்­கொண்டார். 1997ஆம் ஆண்டு செப்­டெம்பர் 5ஆம் திகதி இம்­மண்­ணு­லகை விட்டு விண்­ணு­லகை அடைந்தார்.

அன்னை மறைந்­தாலும் அவர் ஆற்­றிய சேவைகள் இன்றும் கண்­முன்னே காட்­சி­ய­ளிக்­கி­றது. உதா­ர­ணாக, “பிறர் அன்பின் பணி­யாளர்” சபை 123 நாடு­களில் 610 சேவை மையங்கள், நான்­கா­யி­ரத்­துக்கும் அதி­க­மான அருட் சகோ­த­ரர்கள், பத்­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட ஆத­ர­வற்­ற­வர்கள் என பல­ருக்கு சேவை­யாற்றி வரு­கி­றது.

அன்னை தெரேசா ஆற்­றிய சேவை இறை சேவை. உலக மக்கள் அனை­வ­ருக்கும் அன்­னை­யாகத் திகழும் இவ­ருக்கு 1962இல் பத்ம விருது, 1979இல் அமை­திக்­கான நோபல் பரிசு, 1980இல் பாரத ரத்னா விருது, 1996இல் USA கௌரவ பிரஜை, 2003இல் அருளாளர் பட்டம், புனிதர் பட்டம் போன்ற பல விருதுகளும் இவருக்கு சொந்தமாயின.

இறைவனின் படைப்பிலே மனித படைப்பு உன்னதமானது. அதில் மனிதன் மனிதனாக வாழ்வது இவ்வுலகில் மிக அரிது. ஆனால், எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பது நியதி. தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த அன்னை தெரேசா அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான பெண் என்பதில் ஐயமில்லை.

கணேசன் சகுந்தலா
பள்ளகெட்டுவ.

You must be logged in to post a comment Login