General

என் ஏழாம் அறிவு சொல்லுதுங்க!

By  | 
  • சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்.
  • வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!
  • எல்லாரையும் நம்புங்க… துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க… தன்னம்பிக்கை தானா வந்துடும்!!
  • விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா, வேலை இல்லாம சொந்தக்காரன் வீட்டுக்கு மட்டும் போகமுடியாது.
  • உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!
  • பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது.
  • ஒவ்வொரு கைப்பேசியிலும் இருக்கின்றன. தொடர்புகொள்ள முடியாத, ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
  • நேற்று வைத்த தண்ணீர் போத்தலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் தண்ணீர் கேன் நீர் மீது வருவதில்லை!!
  • சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர்வழியில் பயணிப்பதில்லை.
  • மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!
  • குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை!
  • ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று… அன்பாக இருக்கத் தெரியும். ஆனால், யார் மீதென தேர்ந்தெடுக்கத் தெரியாது!
  • ஒரு நடிகர் நான்கு பெண்களோடு ஆடினால், அது ‘ஓப்பனிங் சோங்’காம். அதே ஒரு நடிகை நான்கு ஆண்களோடு ஆடினால், அது ‘அயிட்டம் சோங்’காம். ஆணாதிக்கச் சமூகம்!
  • நாமதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே… அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?
  • ஒரு காலத்தில் நன்றாக ஆங்கிலம் பேசியவர்களை வியந்து பார்த்த நாம், இப்போது நன்றாக தமிழ் பேசுகிறவர்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!!
  • ‘அப்பாக்கிட்ட காசு இல்லம்மா’ எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்குச் சோகமயமானது!
  • காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில் கடவுளிடமே காசு வேண்டும் என கேட்கிறோமே……. இது என்ன கணக்கு?

You must be logged in to post a comment Login