General

எல்லாரும் ஒரே மாதிரி!

By  | 

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்தித்தால் என்ன நடக்கும்?

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒருவரின் கை ரேகை போல் இன்னொருவரின் கைரேகைகூட இல்லை. அப்படியிருக்கும்போது ஒரே மாதிரி சிந்திப்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. ஒருவேளை மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் என்ன நடக்கும்?

நல்லவிதமாகச் சிந்தித்தால் யாரும் பசியால் வாடமாட்டார்கள். யாரும் துன்பப்படமாட்டார்கள். எல்லோரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும்.

ஒரு வேளை கெட்டவிதமாக சிந்தித்தால் என்ன ஆகும்?

நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரே ஒரு ஹிட்லருக்கே இந்த உலகத்தால் தாங்க முடியவில்லை. அவரைப் போல் அனைவரும் சிந்தித்தால் என்ன ஆகும்?

மனிதர்கள் வெவ்வேறு விதமாகச் சிந்திப்பதால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது. முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

You must be logged in to post a comment Login