General

எஸ்கலேட்டரின் கைப்பிடியில் தீநுண்மித் தொற்று!

By  | 

தென்கொரியாவைச் சேர்ந்தவர் கிம் கியாங் யியான். இவருடைய 13 வயது மகள் ஒரு முறை எஸ்கலேட்டரில் செல்லும்போது தவறி விழுந்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டது. எஸ்கலேட்டரின் கைப்பிடியை பிடிக்காமல் அவர் சென்றதால்தான் அந்த விபத்து ஏற்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, வெளியே வரவே பலரும் பயப்பட்டநிலையில், பல நாடுகளில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், ரயில்நிலையங்கள் என பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். எஸ்கலேட்டரில் செல்லும்போது, அதன் கைப்பிடியில் கை வைக்காமல் ஒருவிதத் துணிச்சலுடன் இதற்கு முன்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சென்ற இளம் தலைமுறையினர், இப்போது கைப்பிடியில் கை வைத்தால் கொரோனா தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் கைப்பிடியைத் தொடுவதில்லை.

தன் மகளுக்கு ஏற்பட்ட நிலை பிறருக்கும் ஏற்படக் கூடாது என்று நினைத்த கிம் கியாங் யியான், எஸ்கலேட்டரின் கைப்பிடியைத் தூய்மைப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை எஸ்கலேட்டரில் பொருத்திவிட்டால், எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கும் அதன் கைப்பிடி தூய்மையாகிக் கொண்டே இருக்கும்.

அதற்கு புற ஊதாக்கதிர் சி பயன்படுத்தப்படுகிறது. எஸ்கலேட்டரின் கைப்பிடியைத் தூய்மைப்படுத்தும் இந்தக் கருவியின் பெயர் “கிளியர்வின்”. இது அனைத்துவிதமான தீநுண்மிகள், பக்டீரியாக்கள் ஆகியவற்றை அளிக்கும் திறன் உடையது.எஸ்கலேட்டரின் இயக்கத்தை வைத்து இந்தக் கருவியில் உள்ள டைனமோ இயங்குகிறது. அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து புற ஊதாக்கதிர்கள் உற்பத்தியாகின்றன. லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இந்தக் கருவி இப்போது பொருத்தப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login