Cinema

ஒன்லைனில் ஓவியா!

By  | 

படங்களில் நடிக்காத நிலையில், தன்னை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்த, நடிகை ஓவியா, ரசிகர்களின் கேள்விக்கு, “ஒன்லைனில்” பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கு என்னை அதிகம் பாதிக்கவில்லை. டிவி, மொபைலில் அதிகம் நேரத்தை செலவழிப்பதில்லை. தற்போது, யோகா கற்று வருவதால் உடல் இளைத்து இருக்கிறேன். இனி முடி வெட்டப்போவது இல்லை. தொடர்ந்து வளர்ப்பேன்.

எனக்கு பிடித்த நடிகர், என் அப்பா தான். மீண்டும், பிக்பொஸ் அழைத்தால், நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை, எல்லா நாளும் தீபாவளி தான்.

ரசிகர்களுக்கு நான் எந்த அறிவுரையும் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதெல்லாம், அன்பு செலுத்துங்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

You must be logged in to post a comment Login