General

ஒரு நிமிஷம் பொறு!

By  | 

ஒரு முறை கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன் கேட்டான்:

“சாமி, ஒரு கோடி வருசங்குறது உங்களுக்கு எவ்வளவு நேரம்?”

இறைவனும் சிரித்துக்கொண்டே “ஒரு கோடி வருசங்குறது ஒரு நிமிஷம்” என்றார்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த மனிதன் “அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்குறது, சாமி” அவரும், ‘ஒரு ரூபாய் போல” என்றார்.

உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய் “அப்ப, எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்” என்றான் மிகவும் அடக்கமாய்…

இறைவனும் மென்மையாக சிரித்துக்கொண்டே “நீ ஒரு நிமிஷம் பொறு” என்றார்.

You must be logged in to post a comment Login