Women Achievers

ஒரு மாதத்தில் 100 புத்தகங்களை படித்த பெண்

By  | 

ஜேர்மனியை சேர்ந்த பெண்மணியொருவர் ஓரே மாதத்தில் 100 நூறு புத்தகங்களை படித்து சாதனை படைத்துள்ளார்.

ஜேர்மனியின் பேர்லினில் விற்பனை அபிவிருத்தி முகாமையாளராக பணியாற்றும் தெரேசே என்ற பெண்மணியே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவர் அரசியல் தலைமைத்துவம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஓரே மாதத்தில் 100 நூல்களை வாசித்து சாதனை படைத்துள்ளார்.

சகாவொருவரின் பந்தயம் காரணமாகவே அவர் இந்த சாதனையை பூர்த்தி செய்துள்ளார்.

அவரது சகா ஒருவர் நூல் ஒன்றை இரண்டு மணிநேரத்தில் வாசித்து முடிக்குமாறு அவரை கோரியுள்ளார் எனினும் தெரேசே அதில் தோல்வியடைந்துள்ளார். இதன் பின்னரே அவர் நூறு நூல்களை வாசித்து சாதனை படைத்துள்ளார்.

You must be logged in to post a comment Login