General

ஒரே ஒரு காரணம்!

By  | 

அலாரம் அடிப்பதை அணைத்து வைத்துவிட்டுப் புரண்டு படுத்த மகளை அம்மா தட்டி எழுப்பினாள்.
‘கல்லூரிக்கு செல்ல நேரமாகிவிட்டது. நீ என்ன சின்ன குழந்தையா? பொறுப்பு வேணாமா? எழுந்திரு’ என்றாள்.
‘அம்மா எனக்கு கல்லூரிக்கு செல்லவே பிடிக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் சொல்றேன், கேள்.


ஒன்று, கல்லூரியின் ஆசிரியர்கள் ஒருவரையும் எனக்கு பிடிக்கவில்லை… ஸ்டூடன்ட்ஸ் சிலரை பிடிக்கவில்லை… நான் கல்லூரிக்குப் போகவேண்டும் என்றால், நீ பொருத்தமான இரண்டு காரணங்கள் சொல்லேன்…’ என்றாள் மகள்.
‘நீ கல்லூரிக்குப் போக இரண்டு காரணங்கள் என்ன? ஒரு காரணமே போதும்’ என்றாள் அம்மா.
‘என்ன காரணம்?’
‘ஏன்னா… நீதான் கல்லூரிக்கு அதிபர்.’

You must be logged in to post a comment Login