Covid 19

கறுப்பு பூஞ்சை நோய்,துவைக்கப்படாத முக கவசம் காரணம்

By  | 

‘கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய், துவைக்கப்படாத முககவசம் போன்றவை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்’ என, மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:கொரோனா சிகிச்சையில், ‘ஸ்டிராய்டு’ எனப்படும் ஊக்க மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியோர், நீரிழிவு நோய் உள்ளோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை, கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபோது, குளிர்ச்சியான ஒட்சிசன் வழங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.அதேபோல், துவைக்காத, சுத்தமில்லாத முக கவசம் அணிவதும், இந்த நோய் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிடும்.அதனால் இதுபோன்ற பிரிவினருக்கு, கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும்போதே, பூஞ்சைக்கு எதிரான மருந்துகளை அளித்தால், கறுப்பு பூஞ்சை ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

You must be logged in to post a comment Login