Health

கற்பூரவள்ளியின் பயன்கள்

By  | 

கற்பூரவள்ளி (Coleus aromaticus) வீட்டில் வளர்க்கப்படும் ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கற்பூரவள்ளியின் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம்.
ஊட்டச்சத்துக்கள் 100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போவைத்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் விட்டமின் ஏ, கல்சியம், விட்டமின் சி, இரும்புச்சத்து, விட்டமின் பி6 மற்றும் மக்னீசியமும் உள்ளது.
இப்படி பல மருத்துவ குணங்களை கொண்ட கற்பூரவள்ளியின் நன்மைகள் பற்றி பார்ப்போம்…

 • கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.
 • கற்பூரவள்ளியில் விட்டமின் கே நிறைந்துள்ளது. இந்த விட்டமின் கே சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.
 • கற்பூரவள்ளி முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.
 • கற்பூரவள்ளி இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
 • கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
 • காய்ச்சல், சளி மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று திண்பது நல்லது. இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.
 • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
 • நெஞ்சு சளியில் இருந்து கற்பூரவள்ளி எண்ணெய் விரைவில் நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இப்படி 4-5 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல பலன் கிடைக்கும்.
 • கற்பூரவள்ளி அஜீரண கோளாறுகளைத் தடுக்கும். அதுவும் இது பித்த நீரின் உற்பத்தியைத் தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு லேசான அஜீரண கோளாறு என்றால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால், ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 2-3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானம் விரைவில் மேம்படும்.

குழந்தைகளுக்கு…

 • கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்தாகும்.
  வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
 • இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
  இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
 • இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
 • இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
 • கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
 • தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
 • குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக கழுவிய 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். இந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்

 

You must be logged in to post a comment Login