Articles

கலப்படம் 

By  | 

உணவுப் பொருள்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய எளிமையான சில வழிமுறைகள் உள்ளன. அன்றாடம் நாம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். உணவின் பாதுகாப்பே உயிரின் பாதுகாப்பு எனலாம்.
உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே நோய்களுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது. எந்த உணவுப் பொருள்களில் எதைக் கலப்படம் செய்திருக்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்து கொண்டே விரைவாக கண்டறிவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

நெய்:
கண்ணாடிக் கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய்யோ அல்லது வெண்ணெய்யோ எடுத்துக்  கொள்ளவும். டிங்சர் அயோடினை 2 அல்லது 3  சொட்டுக்கள் சேர்க்கவும். நீல வண்ணம் தோன்றினால்  நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கோ அல்லது வேறு  கஞ்சிப் பசையோ கலந்துள்ளது என்பதை அறியலாம்.

 

கோப்பி தூள்:
கோப்பித்தூளில் சிக்கரி கலந்துள்ளதா என்பதை அறிய, ஒரு கண்ணாடி தம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி கோப்பித்தூளை சேர்க்கவும். காப்பித்தூள் மிதக்கும்; சர்க்கரைத் தூள் மூழ்கும்.

மஞ்சள் தூள்:
மஞ்சள் தூளில் செயற்கை வண்ணத்தை கலந்திருப்பதை அறிய, கண்ணாடி தம்ளரில் நீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்க்கவும். இயற்கையான மஞ்சள் தூள் கீழிறங்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். கலப்பட மஞ்சள் தூளாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.

 

மிளகாய் தூள்:
ஒரு கண்ணாடி தம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய்ப் தூளை தூவவும். மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். மிளகாய் தூள் நீரின் அடியில் தங்கும்.

மிளகு:

சிறிதளவு மிளகை எடுத்து நீருள்ள கண்ணாடி டம்ளரில் போடவும், தூய மிளகாக இருந்தால் டம்ளரின் அடியில் தேங்கும். கலப்பட மிளகாக இருந்தால் பப்பாளி விதைகள் நீரில் மிதக்கும்.

 

பெருங்காயம்:
துருப்பிடிக்காத கரண்டியில் சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து நெருப்பில் எரிக்கவும். தூய பெருங்காயம் கற்பூரம் எரிவது போல பிரகாசமான ஒளியுடன் எரியும். கலப்பட பெருங்காயம் அப்படி எரியாது.

தேன்:

கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்து அதில் ஒரு சொட்டு தேனை விடவும். தூய்மையான தேன் நீரில் கலக்காது. தேன் நீரில் கலந்தால் அதில் சர்க்கரை கலப்படம் உள்ளது என்பதை உணரலாம்.

 

அப்பிள்:
அப்பிள் மீது மெழுகு பூசப்பட்டதை அறிய, ஒரு கத்தியை எடுத்து அப்பிளின் மேற்பரப்பைச் சுரண்டவும். மெழுகு தடவப்பட்டிருந்தால் அது கத்தியில் ஒட்டும்.

 

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய, ஒளி புகக்கூடிய கண்ணாடி தம்ளரில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு அதை குளிர்சாதனப் பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும். குளிர்பதனம் ஆன பிறகு தேங்காய் எண்ணெய் திண்ம நிலைக்கு மாறும். கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வேறு எண்ணெய் தனிப்படலமாகத் தெரியும்.

கோதுமை மா:
ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அந்த நீரின் மேற்பரப்பின் மீது கோதுமை மாவைத் தூவுங்கள். தூய கோதுமை மாவாக இருந்தால் நீர்ப்பரப்பின் மீது அதிகமான தவிடு இருக்காது.கலப்படக் கோதுமை மாவாக இருந்தால் நீர்பரப்பின் மீது அதிகமான தவிடு இருக்கும்.

பச்சைப் பட்டாணி:

ஒரு கண்ணாடி தம்ளரில் சிறிதளவு பச்சைப் பட்டாணியை எடுத்து அதில் நீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை மணிநேரம் அப்படியே நிலையாக வைத்திருக்கவும். நீரின் நிறம் மாறினால் அது கலப்படப் பட்டாணி என்பதை அறியலாம்.

You must be logged in to post a comment Login