General

காசா நகரில் ‘அல் ஜசீரா’ கட்டடம் தகர்ப்பு!

By  | 

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் ‘காசா டவர்’ என்ற பெயரில் உள்ள 11 மாடி கட்டடத்தில் கத்தார் நாட்டை மையமாக வைத்து செயல்படும் ‘அல் ஜசீரா டிவி’ மற்றும் அமெரிக்காவின் ஏ.பி. செய்தி நிறுவனம் உட்பட பல சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய விமான தாக்குதலில் காசா டவர் கட்டடம் தரைமட்டமானது. இந்த தாக்குதலில் உயிர் பலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.அல் ஜசீரா செய்தி சேவை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காசா டவர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலை கண்டித்தும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அனைத்து ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஏ.பி. செய்தி நிறுவனமும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன் அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேறுவதற்கு இஸ்ரேல் ராணுவம் ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login