Articles

காதல் கொலைகள்!

By  | 

ஐஸ்லாந்திலுள்ள Illugastaoir பண்ணையிலிருந்து ஓடிவந்த ஆக்னஸ் என்ற பெண், பண்ணை வீடு தீப்பற்றிக்கொண்டது என அலறினார். மக்கள் பலரும் ஓடி வந்து பார்க்க, அங்கு பண்ணை ஓனர் நாதன் கெட்டில்சன், அவரின் நண்பரான பீட்டர் ஜான்சன் இருவரும் தீயில் உருளைக்கிழங்காய் வெந்திருந்தார்கள். அதற்கு முன்பே இருவரும் கத்தியாலும் சுத்தியலாலும் தாக்கப்பட்ட காயங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். காஸனோவா நாதனின் லீலைகள்தான் இதற்கு காரணம்.

இயற்கை மருத்துவரான நாதன், உள்ளூர் கவிதாயினியான ரோசா, டீனேஜ் பெண் சிக்ரியர் என்ற இருவரையும் தெலுங்கு ஹீரோ போல் காதலித்தார். இதை பார்த்து பொறாமை கொண்ட ஆக்னஸ், சிகர்ஸன் மற்றும் அவர்களின் தோழி ஒருத்தி மூவரும் இணைந்து செய்த கொலைதான் இது என பின்னர் தெரியவந்தது. மூவரில் ஆக்னஸின் தோழிக்கு ஆயுள் தண்டனை. சிகர்ஸனுக்கும் ஆக்னஸ{க்கும் 1830ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மரணதண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது.

இருவரின் தலைகளும் அங்குள்ள ஈட்டியில் குத்தி வைக்கப்பட்டன. சில மணிநேரத்திலேயே இருவரின் தலைகளும் அங்கிருந்து காணாமல் போயின. பின் 1930ஆம் ஆண்டில் Illugastaoir பண்ணையருகே ஜோர்ன் என்ற இடத்தில் தொலைந்த தலைகளோடு இரு எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. காதல் படுகொலைகளும், ஆக்னஸின் வாழ்வும் இன்று வரை அங்கு படுமர்மமாகவே பேசப்பட்டு வருகின்றன.

You must be logged in to post a comment Login