Health

கால்களில் வீக்கம் குறைய…

By  | 

ஒரு மணிநேரம் கால்களை தொங்க விட்டு உட்கார்ந்தாலே சிலருக்கு கால்கள் வீங்கிவிடு­கின்­றன. இதற்கு என்ன காரணம்?

கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்குத்தான் தொங்க போட்டவுடன் கால் வீக்கம் வரும். அதனால், கால் வீக்கம் வருவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை பார்த்து  பரிசோதித்து, முறை­யாக சிகிச்சை பெற வேண்டும்.

பயணங்களின்போது அதிக நேரம் கால்களை ஒரே இடத்தில் வைத்து உட்கார்வதால், சிலருக்கு வீக்கம் ஏற்படும். விமான பயணங்களில் இப்படி பல மணிநேரம் காலை மடக்கி உட்கார்வதால் ஏற்படும் வீக்கத்தை ‘எக்க­னாமி கிளாஸ் சிண்ட்ரோம்’ என்கிறோம். காலில் இருந்து இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டமானது புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே செல்கிறது.

இந்த இரத்த ஓட்டமானது குறையும்போது கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பல மணி நேரங்கள் காலை மடக்கி உட்கார்ந்து பயணம் செய்பவர்களுக்கு ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ எனப்படும் நாளங்களுக்கு உள்ளே இரத்தக்கட்டிகள் பிரச்சினையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க கால்களுக்கும் பாதங்களுக்கும் தேவை­யான பயிற்சிகளை கொடுக்க வேண்டும்.

ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். வீனஸ் ஸ்டொக்கிங்ஸ் (venous stockings) எனப்படும் காலின் இரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் காலுறை­களை அணிந்துகொண்டால் கால் வீக்கம் மற்றும் ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ வராமல் தவிர்க்கலாம்…

You must be logged in to post a comment Login