கொரோனா

கியூபாவின் ‘அப்டாலா’ தடுப்பூசி; 92 சதவீத திறனுடையது!

By  | 

கியூபாவில், கொவிட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ‘அப்டாலா’ என்னும் தடுப்பூசி 92.28 சதவீத திறன் கொண்டது என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொவிட் வைரஸ் பரவல் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். அந்தவகையில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்நிலையில், கியூபாவும் ‛அப்டாலா’ என்னும் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆனால், இந்த தடுப்பூசியை மூன்று தவணையாக செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபா இதற்கு முன்னதாக சோபெரானா 2 என்னும் தடுப்பூசியை 62 சதவீத திறன் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த ‛அப்டாலா’ தடுப்பூசி 92.28 சதவீத திறன் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மிகேல் தியாஸ் கானெல் தெரிவித்துள்ளார். மேலும், 13 மாதங்களில் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இரு தடுப்பூசிகளுக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login