Cinema

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மிஸ் இந்தியா’ டிரெய்லர் வெளியீடு…

By  | 

மகா நடிகை என்கிற தெலுங்குப் படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.

இவருடைய அடுத்த தெலுங்குப் படம் – மிஸ் இந்தியா.நரேந்திர நாத் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மிஸ் இந்தியா படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் முனைவராக உள்ள கீர்த்தி சுரேஷ் சந்திக்கும் சவால்கள் காட்சிகளாக டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

You must be logged in to post a comment Login