General

குதிரை மிட்டாய்!

By  | 

லொலிபொப் ஒருவகை சர்க்கரை மிட்டாய். குச்சியில் பொருத்தப்பட்ட இறுகிய சொக்லெட்.

இது சுக்ரோஸ், சோளசிரப், பழச்சுவை கலந்த மிட்டாய். பட்டை, உருண்டை, ஸ்பைரல் என பல உருவங்களில் கிடைக்கும். இதில், ஐஸ் லொலிபொப், உறைந்த நீர் லொலிபொப், டயட் லொலிபொப், கோர்மைட் லொலிபொப் என பலவகை உண்டு.

உலகில் முதலில் லொலிபொப் உருவாக்கியவர் அமெரிக்காவை சேர்ந்த ஜோர்ஜ் ஸ்மித். உண்மையில் ‘லொலிபொப்’ என்பது அவரது பந்தயக் குதிரையின் பெயர். அதன் மீதான ஈடுபாடு காரணமாக சர்க்கரை மிட்டாய்க்கு அந்த பெயரை வைத்தார்.

இதை அமெரிக்கர்கள் ‘சக்கர்’ எனவும் அழைக்கின்றனர். ஐரோப்பா, அவுஸ்திரேலிய நாடுகளில் ‘லொலி’ என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், ‘கேண்டி’ என அழைப்பர். இதற்கு அரபு மொழியில் ‘சர்க்கரை’ என்று பொருள்.

உலகில் சிறந்த லொலிபொப்புகளாக டொப்சாய்ஸ், கப்பா கப்ஸ், மோஸ்ட் சேவிங்ஸ், ரிங்டாப் ஹெல்தி ஆகியவை உள்ளன. விலை உயர்ந்தது ‘தி சுகர் சேர்’ என்பதாகும்.

You must be logged in to post a comment Login