Children

குழந்தைகள் வாழ்க்கைக்கு வித்திடும் பழக்க வழக்கங்கள்

By  | 

குழந்தைகள் எதை பண்ணினாலும் அது ரசிக்கத்தக்கது தான் ஆனால் ஒரு சிலவற்றை ஆரம்பத்திலேயே நாம குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கணும்.

“”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் ” என்ற வள்ளுவர் வாக்கிற்கினங்க ஓழுக்கம் வாழ்வியல்க்கு இன்றியமையதது.

எனவே ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிற மிகப்பெரிய பொறுப்பு நம்ம கிட்ட தான் இருக்கு.

01.மரியாதை

குழந்தை பேச ஆரம்பித்த உடனே குழந்தைகளுக்கு அப்பாவ கூப்பிடுனு சொல்லிக் கொடுக்காம வாங்க போங்கன்னு சொல்லி பழக்கலாம். நாங்க எப்படி வீட்டில் நடந்துக்கிறர்மோ சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்கள் போன்றவைகளை தவிர்த்துக்கொள்ளலாமே..

02. பிடிவாதம்

ஆரம்பத்துல குழந்தை சாப்பாடுல ஆரம்பிக்கிற பிடிவாதம் காலப்போக்கில் எல்லாவற்றிலுமே பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க, ஆரம்பத்திலேயே இந்த பிடிவாதத்தைக் கிள்ளியெரிஞ்சிருங்க. No யென்றால் No தான் என்பதில் நீங்கள் உறுதியாக இருங்கள்.

03.சுதந்திரம்

குழந்தைக்கு முழு சுதந்திரமும் கொடுங்க ஏதாச்சு தப்பாக கேட்டா கூட எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். வீடு தான் உலகம் என்று வீட்டுக்குள்ளேயே வைத்து இருக்காம வெளியிடங்களுக்கு கூட்டி போங்க புதிய முகங்கள் புதிய சூழலை அறிமுகப்படுத்துங்க.

04.பாதுகாப்பு

குழந்தைகள் எல்லா இடத்திலேயும் பாதுகாப்பாய் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ண மாட்டாங்க அவளுக்கு யார்கிட்ட இருந்தா பாதுகாப்பா இருக்கும் என்று உணர்ந்து அவங்ககிட்ட குடுங்க. குழந்தைகள் யார்கிட்ட இருந்தாலும் அவர்கள் உங்கள் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்.

05. மதம்

நாங்கள் எந்த மதமாக இருந்தாலும் பரவால்ல எல்லா மதமும் நல்லவற்றையே தான் போதிக்கின்றது. நம்ம மதம் கலாசராத்தில் இருந்து நாம பின்பற்ற நல்ல விடயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க.

06.பகிர்ந்தளித்தல்

மத்த குழந்தைகள் கூட விளையடும் போதோ அல்லது சாப்பிடும் போதோ பகிர்ந்தளிக்க பழக்கனும். உங்கிட்ட இரண்டு toys இருக்கு ஒன்ன கொடு அப்படி எதாச்சி சொல்லி பழக்கலாம்.

07.தயவு செய்து ,நன்றி ,மன்னிப்பு சொல்ல பழக்குதல்

நம்ம குழந்தைகள் கூட இருக்கும் போதே பண்ற ஓவ்வொரு செயலுக்கும் உரிய சொற்களை சொல்ல சொல்லி பழக்கலாம்.

08. பொறுப்புகளை கொடுத்தல்

வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை கொடுக்கலாம். அதை அவர்கள் சரியாக செய்யும் பட்சத்தில் அவர்களை பாரட்டலாம். தவறா செய்தால் திட்டாமல் அவர்களை ஊக்குவிக்கலாம்..

09. தோல்விகளை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொடுங்கள்

இப்ப எல்லாம் குழந்தைகளுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாக்குவம் இல்லை. இந்த தடவை கிடைக்காட்டி என்ன அடுத்த தடவை try பண்ணலாம். உங்ககிட்ட இல்லாத திறமையனு சொல்லி அருதல் சொல்லி தேற்றிவிடுங்க.

10. சிலசமயங்களில் குழந்தைகளை தனிமையில் விளையாட விடுங்கள். அதேவேலை எல்லோரும் சேர்ந்து விளையாடவும் அனுமதியுங்கள்..

11. குழந்தைக்கு தேவையில்லாமல் காசு கொடுப்பதைத் தவிருங்கள். காசை உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை பழக்குங்கள். அந்தப் பணத்தைக்கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்ய தூண்டுங்கள்.

12. அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், நட்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான அர்த்தங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து நல்ல குழந்தையாக மாற்றுங்கள்.

எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தை தான் அவர்கள் நல்லவர் ஆவதிலும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பிலேயே….

You must be logged in to post a comment Login