Beauty

கூந்தலுக்கு கெரட்டின் சிகிச்சை

By  | 

கூந்தல் என்பது கெரட்டின் என்கிற புரதத்தால் ஆனது. இன்று டீன் ஏஜிலேயே பலர் கூந்தலுக்கு ரசாயன சிகிச்சைகள் செய்து கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், அயர்னிங் என ஏதோ ஒரு ரசாயன சிகிச்சை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதனால் கூந்தலில் இயற்கையாக உள்ள கெரட்டின் என்கிற புரதச்சத்து நீங்கிவிடும்.

அதன் விளைவாக கூந்தல் மிகவும் வறண்டு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முரட்டுத் தன்மையுடன் மாறும். கெரட்டின் குறைபாட்டால் ஏற்படும் இப்பிரச்சினையை நீக்கி, கூந்தலுக்கு வெளிப்புறத்தில் இருந்து கெரட்டின் சத்தினை அளிப்பதால் கூந்தல் வறட்சி நீங்கும். மென்மையாகவும் மாறும். இந்த கெரட்டின் சிகிச்சையை அதற்கென நிபுணத்துவம் பெற்றவர்களிடம் மட்டுமே செய்ய வேண்டும்.

You must be logged in to post a comment Login