Health

கொரோனா அறிகுறி செவியை பாதிக்குமா

By  | 

‘கோவிட்’ தாக்குதலில் பலருக்கு பலவிதமான அறிகுறிகளும், பாதிப்புகளும் நேருகின்றன. இதில் அதிகம் கவனிக்கப்படாதது காது தான். கொரோனா வைரஸ் தாக்கியவர்களில் சிலருக்கு காது இறைச்சல், காது கேட்கும் திறன் குறைவது போன்ற அறிகுறிகளும், பாதிப்புகளும் நேரக்கூடும் என, தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடந்த ஓராண்டில் வெளியான, கொரோனா பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை அலசி வருகின்றனர். அதில் தான், ‘டின்னிடஸ்’ எனப்படும் காது இறைச்சல், செவித்திறன் பாதிப்பு, ‘வெர்டிகோ’ எனப்படும் உயரம் குறித்த அச்சம் போன்ற அறிகுறிகளை, நோயாளிகள், மருத்துவர்களிடம் தெரிவித்திருப்பதை கண்டறிந்தனர்.

எனவே, கொரோனா நோயாளிகளில், செவி பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மான்செஸ்டர் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே சமயம், இந்த ஆய்வுகள் நோயாளிகள் தாமாக தெரியப்படுத்திய அறிகுறிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You must be logged in to post a comment Login