Health

கொரோனா காற்றிலேயே அதிகம் பரவுகிறதா?

By  | 

ஒரு முழு ஆண்டு கடந்தும், கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து இன்னும் விஞ்ஞானிகள் உறுதியாக எதையும் சொல்லாமல் உள்ளனர். அண்மையில், மருத்துவ ஆய்விதழான, ‘தி லான்செட்’ கொரோனா தொற்று காற்றின் மூலமும் அதிகமாக பரவுகிறது என்பதற்கு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

தற்போது, தும்மல் அல்லது இருமல் மூலம் சிதறும் நீர்த் திவலைகள், எதிராளியின் சுவாசத்தில் புகுந்து, கோவிட்- 19 நோய் ஏற்படுவதாகவே பலரும் நம்புகின்றனர். நீர்த் திவலைகள் கனமானவை என்பதால் அதிக தூரம் அவை பயணிப்பதில்லை. சீக்கிரமே புவியீர்ப்புக்கு ஆளாகி அவை தரையில் விழுந்துவிடும்.

மாறாக, நுண் துளிகள் வழியே, காற்றில் கலக்கும் கொரோனா கிருமிகள் அதிக துாரம் பயணித்து, தொற்றை ஏற்படுத்துகின்றன என, ‘தி லான்செட்’ கட்டுரை விளக்குகிறது. இரண்டாம் ஆண்டில், இரண்டாம் அலை அதிகரிக்கும் இந்த நேரத்தில், இதை உணர்ந்து, சமூக இடைவெளிக்கு முக்கியத்துவம் தந்தால் தான் பரவலை தடுக்க முடியும்.

You must be logged in to post a comment Login