Cookery

சத்து நிறைந்த ஸ்டீமெட் லெமன் ஃபிஷ்

By  | 

தேவையான பொருட்கள்

உங்களுக்கு பிடித்த மீன் துண்டுகள் – 6

மிளகு – ¼ டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

பூண்டு விழுது – சிறிதளவு

எலுமிச்சை சாறு – இரண்டு டீஸ்பூன்

ஒலிவ் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

மீன் துண்டுகளை சுத்தம் செய்து, அதனுடன் சிறிது உப்பு பூண்டு பேஸ்ட், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் அதை ஒரு குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். விசில் போட வேண்டாம்.

மசாலா தடவிய மீன் துண்டுகளை ஸ்டீம் செய்யவும்.

6 முதல் 8 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் இறக்கவும்.

இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான ஸ்டீம் லெமன் ஃபிஷ் ரெடி.

 

You must be logged in to post a comment Login