Beauty

சன்ஸ்கிரீன் A – Z தகவல்கள்!

By  | 

அதிகளவு கெமிக்கல் கலப்பில்லாத சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து காக்கும்.

கோடைக்காலம் வந்ததும் சருமப் பிரச்சினைகள் அதிகளவில் வரத்தொடங்கிவிட்டன. நிறமாற்றம், தோல் சுருங்குதல், கட்டிகள் போன்ற கோடைக்கால சருமப் பிரச்னைகளிலிருந்து உங்கள் சருமத்தை தற்காத்துக்கொள்ள அவசியம் சன்ஸ்கிரீன் க்ரீம் பயன்படுத்த வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனை எப்படித் தேர்வு செய்வது என்பதை விளக்கும்விதமாக, சன்ஸ்கிரீன் பற்றிய A – Z தகவல்களைத் தருகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

சன்ஸ்கிரீன் க்ரீம், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களான அல்ட்ரா வயல்ட் ஏ மற்றும் அல்ட்ரா வயலட் சி-ல் இருந்து  சருமத்தை பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. ஆனால் உங்கள் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழுப்பயனையும் அடைய முடியும்.

சன்ஸ்கிரீன் தேர்வு

நீங்கள் வாங்கும் சன்ஸ்கிரீனில் எஸ்.பி.எஃப்(SPF – Sun Protection Factor) என்ற அளவு குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவானது உங்கள் சருமத்தை குறிப்பிட்ட அந்த சன்ஸ்கிரீன் எவ்வளவு நேரம் சூரிய ஒளி பாதிப்பிலிருந்து காக்கவல்லது என்பதைக் குறிக்கும். உங்கள் சன்ஸ்கிரீனில் குறிக்கப்பட்டிருக்கும் SPF எண்ணை ஐந்தால் பெருக்கிக்கொள்ளவும். உதாரணமாக, SPF 30 என்று குறிக்கப்பட்டிருந்தால், 30X5 = 150; 150 நிமிடங்கள் வரை  உங்கள் சருமத்தை வெயிலிலிருந்து அந்த சன்ஸ்கிரீன் காக்கவல்லது.  நீங்கள் எவ்வளவு நேரம் வீட்டுக்கு வெளியே செலவிடவேண்டியிருக்கும் என்பதற்கு ஏற்ப, உங்கள் சன்ஸ்கிரீனை தேர்வு செய்யுங்கள். அதிகளவு கெமிக்கல் கலப்பில்லாத சன்ஸ்கிரீன்கள் உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து காக்கும்.

 

சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீன்

உங்களுக்கு ஒய்லி ஸ்கின் எனில் ஜெல் டைப் சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யலாம்.

உங்களுக்கு டிரை ஸ்கின் எனில் க்ரீம் டைப் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு நோர்மல் ஸ்கின் எனில் ஃபோம் டைப் சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யலாம்.

சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு லோஷன் டைப் சன்ஸ்கிரீன் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

 

சன்ஸ்கிரீன் வகைகள்

ஆரம்ப காலங்களில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்தால் முகத்தில் எண்ணெய் வடிவது போன்ற தோற்றம் தரும். அதனால் பெரும்பாலான பெண்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்தனர். ஆனால் தற்போது மேட் ஃபினிஷ் சன்ஸ்கிரீன்கள், மொய்ஸ்ச்சரைசருடன் கூடிய சன்ஸ்கிரீன்கள், ஃபவுண்டேஷன் க்ரீமுடன் கூடிய சன்ஸ்கிரீன்கள், கொஸ்மெட்டிக்ஸ் பொருள்கள் கலந்த சன்ஸ்கிரீன்கள் என பல வகையில் கிடைக்கின்றன. இவற்றில் நீங்க விரும்புவதைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

 

சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் முறை

நீங்கள் வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம்.

சன்ஸ்கிரீன் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்குப் பின் உங்களது வாடிக்கையான மேக்கப்பை போட்டுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை சன்ஸ்கிரீன் அப்ளை செய்யும்போதும், கடந்த முறை அப்ளை செய்த சன்ஸ்கிரீனையும், மேக்கப்பையும் க்ளென்ஸ் செய்த பின்னரே சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்த ஆண், பெண் என எந்த வரையறையும் இல்லை. சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

பத்து வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

டே க்ரீம் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள், சன்ஸ்கிரீன் சேர்ந்துள்ள டே க்ரீமாகப் பார்த்துப் பயன்படுத்தலாம்.

உதடு, கூந்தலை வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்க லிப்ஸ்டிக், ஷாம்பூவில்கூட சன்ஸ்கிரீன் சேர்க்கப்படுகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் முகத்தில் பருக்கள் வருகிறது என்பவர்கள், சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

You must be logged in to post a comment Login