Biodata

சின்னப் பொண்ணு ‘ப்ரீத்தி’

By  | 

Star Profile

சீரியல் பெயர்: வெண்பா

நிஜ பெயர்: ப்ரீத்தி ஷர்மா

செல்லப் பெயர்: ப்ரீத்தி

வயது: 21… ரொம்ப சின்ன பொண்ணு!

பூர்வீகமும் பிறப்பும்: லக்னோ

குடிபெயர்வு: கோயமுத்தூர்

வளர்ந்தது: லக்னோவிலும் கோவையிலும் மாறி மாறி

வசிப்பது: சென்னை

பிறந்த திகதி: 1999 ஜனவரி 31

குடும்பம்: அப்பா – மகேந்தர் ஷர்மா, அம்மா – சைலேஷ் ஷர்மா, அப்புறம் ரெண்டு தம்பிங்க!

மதம்: இந்து

படிப்பு: கோயமுத்தூர், PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பு

கெரியர்: நடிகை, மொடல்

அடையாளம்: குவிந்த உதடு, குழந்தை முகம்,க்யூட் பேச்சு

ஆள் எப்படி?: ஹீரோத்தனமான கேரக்டர், துணிச்சல்காரர்…

திருப்தி: பிடிச்சத பண்ணுற அளவுக்கு சுதந்திரம் இருக்கு!

ஹைட்டு: 5’ 4″

வெயிட்டு: 65 கிலோ

முதல் கெமரா அனுபவம்: 11 வயதில்

தெரிந்த மொழிகள்: ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம்

பிரபலம்: ‘சித்தி 2’ சீரியல்

அறிமுக தொடர்: திருமணம் (அனிதா)

முதல் டிவி நிகழ்ச்சி: ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல’

சீரியல் வாய்ப்பு: ‘ஒரு கதை பாடட்டுமா சார்’ என்ற அல்பம் சீரிஸில் ‘எங்கே போனே ராசா’ என்ற சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, அதன் இயக்குநர் ஜவஹரால் ‘திருமணம்’ சீரியலில் நடிக்க கிடைத்தது.

செம கெமிஸ்ட்ரி: கவின் (நந்தன்) – சித்தி 2

சாப்பிட பிடித்தது: பாஸ்ட் ஃபுட்… (கிடைத்தால் ஃபுல் கட்டு கட்டலாம்)

ரோட் ரைட்: கார் ஓட்ட தெரியும். தானே கார் ஓட்டுவதென்றால் சான்ஸே இல்ல! 2 வீலர்ல பறக்குறதுன்னா ரொம்ப ஹேப்பி!

அழகுக்கு: யோகா, ஜாக்கிங்

டூருக்கு: இஸ்தான்புல், மாட்ரிட்

கவர்ந்த நிறம்: ரெட்

விரும்பி விளையாடுவது: பாஸ்கட் Ball

பிடித்த பழங்கள்: அத்திப்பழம், ராஸ்பெர்ரி

ஃப்ரீ டைம் ஏரியா: மியூசிக், டான்ஸ், ஃபோட்டோ ஷூட்

சோஷியல் மீடியா: டிக் டாக், இன்ஸ்டா

பிடித்த ஹீரோ: சூர்யா

பிடித்த நடிகை: ராதிகா

ஆர்வம்: தனியாகவே ஃபோட்டோ ஷூட் செய்வது, அதை தானே வீடியோ எடுப்பது

ப்ளஸ்: அம்மா கொடுக்கும் தைரியம்

மைனஸ்: கொஞ்சம் சஞ்சல புத்தியும்

ரீல் Vs ரியல்: கத்துக்குட்டி Vs கலகலப்பு, எப்பவும் சிரிப்பு!

போட்டியில் வெற்றி: மிஸ் ஹேண்ட்லூம் – (2017) 3ஆம் இடம்

செல்லக் குட்டீஸ்: டாஷி, லக்கி (வீட்டு நாய் பேரு)

காதல்: லவ்னாலே கேர்தான்.

காதல் + கல்யாணம்: கெரியர் முக்கியம்! வேற எதுவும் யோசிக்கிறதுக்கு இல்ல!

இலக்கு: நல்ல பாடகி ஆவது

அடுத்த ஸ்டெப்: பெரிய திரையில் நுழைவது

வெயிட்டிங் ரோல்: நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர் எதுவானாலும்!

சம்மர்: ஸ்ஸப்ப்ப்பா!!! வெயில் ஓவரோ ஓவர்!

My Fashion

– என்னை எப்போதும் சிம்பிள் & நீட் லுக்கில் காட்டிக்கொள்ளவே பிடிக்கும்.

– ஆடை விடயத்தில் நிறைய மெனக்கெடுவேன்.

– ட்ரெண்ட் எப்போதும் அப்டேட்டில் இருக்கும்.

– ஆனா, என்ன ட்ரெண்ட் மாறினாலும் எனக்கு சூட் ஆவது மட்டுந்தான் என் சொய்ஸா இருக்கும்.

– புடவை ரொம்ப பிடிக்கும். சாரி ப்ளவுஸில் பெக் ஓப்பன், க்ளோஸ் நெக்கையே அதிகம் தேடி அணிவேன்.

– சீரியல்களில் நிறைய சல்வார்கள் அணிந்தாலும், ஒரே மாதிரியாக இல்லாமல் பாந்தினி, லினன், கொட்டன், சிந்தடிக் என மெட்டீரியலிலும், பெட்டர்னிலும் வித்தியாசம் காட்டுகிறேன்.

– ஷு, சென்டில்ஸ் மீது எனக்கு பயங்கர கிரேஸ். ஷொப்பிங் போகும்போதெல்லாம் ஒரு ஹீல்ஸ் தவறாமல் வாங்கிவிடுவேன். எல்லா நிறங்களிலும் ஷுஸ் என்கிட்ட இருக்கு.

– ஹோம்லி லுக்குக்காக ஜிமிக்கி கம்மல்களை அதிகம் அணிகிறேன். அக்ஸிடைஸ்ட் கம்மல்களும் நிறைய இருக்கு.

– ஷொப்பிங் செய்வது அவ்வளவு பிடிக்கும். ஒரு பொருள் பிடிச்சிருந்தா யோசிக்காம வாங்கிடுவேன்.

– ஆடைகளை பொறுத்தவரை, போட்டு பார்த்து, கண்ணாடி சொல்றதைத்தான் நான் கேட்பேன்.

– நான் இம்ப்ரஸ் ஆனா மட்டுமே எந்தவொரு பொருளையும் வாங்குவேன்.

– டார்க் ப்ளு நிறத்தில் ஆடை அணிய கொள்ளை இஷ்டம். வார்ம் கலர்ஸ், பேஸ்டல் கலர்ஸ் என் ஸ்கின் நிறத்துக்கு பொருந்துறதால அந்த நிற ஆடைகளையே சீரியல்லயும் போடுறேன்.

– ஆடை மெட்டீரியல் தரம் பற்றி அதிகம் யோசிக்கிறதால ஒன்லைன் ஷொப்பிங் பண்ணுறதை குறைச்சிக்கிட்டேன். ஃபெஷன் அப்டேட்கள் மட்டும் ஒன்லைனில் பார்த்து தெரிஞ்சிக்குவேன்.

– சின்ன வயதில் ஜீன்ஸ் போட ஆசைப்பட்டு வீட்ல வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பேன். ஆனா, எப்பவும் கவுன்தான் வாங்கித் தருவாங்க.

– 7ஆம் வகுப்பில் அப்பா என் பிறந்தநாளுக்கு வாங்கிக்கொடுத்த ஜீன்ஸ் இன்றைக்கும் எனக்கு ஸ்பெஷல்தான். இப்பவும் வெச்சிருக்கேன்!

– என் ரசிகர்களுக்கு என்கிட்ட பிடிச்சதே கண்கள்தான். ஸோ, எப்பவும் மஸ்காரா போட்டுக்கொள்வேன். நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் கண்ணுக்குத்தான்.

– ஷீட்டிங் இல்லாத நாட்களில் வெளியே போனா மஸ்காரா, லிப்ஸ்டிக் தவிர வேற எந்த மேக்கப்பும் போடமாட்டேன்.

ஸ்டே பியூட்டிஃபுல்!

You must be logged in to post a comment Login