சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி அவசியமில்லை!

By  | 

சிறுவா்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு முன்னுரிமை அளிக்கவில்லை என்று அந்த அமைப்பின் நோய்த்தடுப்பியல் பிரிவு இயக்குநா் கேதரீன் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

சிறுவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வளா்ச்சியடைந்த நாடுகள் அளித்து வருகின்றன. எனினும், அந்த வயதுப் பிரிவினருக்கு கரோனா தடுப்பூசி அளிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு முன்னுரிமை அளிக்கவில்லை.

கொரோனா நோய்த்தொற்றால் சிறுவா்கள் அதிகம் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கோ, உயிரிழப்பதற்கோ அபாயம் மிகவும் குறைவு. எனவே, அவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் நோக்கம் நோய் பரவலைத் தடுப்பது மட்டுமே. அவா்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது முக்கிய நோக்கமல்ல என்றார் அவா்.

முன்னதாக, வளரும் நாடுளில் கொரோனா தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதால், வளா்ச்சியடைந்த நாடுகள் தங்கள் நாட்டு சிறுவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக, அவற்றை பிற நாடுகளுக்கு அளித்து உதவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12 முதல் 15 வயது வரையிலானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளன.

இந்தச் சூழலில், பிரிட்டனும் அந்த வயதுப் பிரிவினருக்கு ஃபைஸா் பயோஎன்டெக் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

 

You must be logged in to post a comment Login