Biodata

சைலன்ட் வொட்ச்சிங் – விஜய் profile

By  | 

பெயர்: விஜய்

பிறந்த திகதி: 22 ஜூன் 1974

ஒரிஜினல் பெயர்: ஜோசப் விஜய்

திரைப்பட்டம்: இளைய தளபதி

செல்லப் பெயர்கள்: நண்பர்கள் கூப்பிடுவது ‘மாப்’, ‘மாப்பு’ (மாப்பிள்ளையின் சுருக்கம்).

அப்போதைய செல்லப் பெயர்: ‘குட்டி விஜயகாந்த்’

அப்பா: எஸ்.ஏ. சந்திரசேகர்

அம்மா: ஷோபா சந்திரசேகர்

மனைவி: சங்கீதா விஜய்

பிள்ளைகள்: மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷா

உயரம்: 170 செ.மீ.

எடை: 70 கிலோ

படிப்பு: விஸ்கொம்

ப்ளட் குரூப்: பி பொசிடிவ்

பிடித்த உணவு: தோசை, மட்டன் பிரியாணி

ராசியான கலர்: கறுப்பு

படங்கள் கமிட் செய்யும் முறை: “கதை கேட்கும்போதே எதாவது ஒரு விஷயம் இம்ப்ரஸ் பண்ணணும். அப்புறம், ஒரு ஃபீல் கிடைக்கணும்”

ரிலாக்ஸ் டைம்: கார் டிரைவிங்

நட்பு வட்டம்: லயோலாவில் விஸ்கொம் படிக்கும்போது உள்ள நண்பர்கள்தான் இப்போதும் விஜயின் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.

ஷூட்டிங் ப்ரேக்கில்…: காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்பார் அல்லது கையில் அப்பிள் டெபில் சோஷியல் மீடியாவில் மேய்வார். அதுவும் சைலன்ட் வொட்ச்சிங்தான்.

                         சினி பிட்ஸ்

குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்கள்:
வெற்றி
குடும்பம்
நான் சிகப்பு மனிதன்
வசந்த ராகம்
சட்டம் ஒரு இருட்டறை
இது எங்கள் நீதி

ஹீரோவாக அறிமுகமான படம்: நாளைய தீர்ப்பு

அக்ஷன் ஹீரோவாக முதல் படம்: பகவதி

அக்ஷன் ஹீரோவாக காலூன்றிய படங்கள்: திருமலை, கில்லி, வேட்டைக்காரன்

25ஆவது படம்: கண்ணுக்குள் நிலவு

50ஆவது படம்: சுறா

பிரச்சினையில் சிக்கிய படங்கள்: தலைவா, மெர்சல்

கௌரவ வேடத்தில் நடித்த படங்கள்: சுக்ரன், பந்தயம்

திருப்புமுனை படங்கள்: பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை

தயாரிப்பாளராக பெயர் வெளியான படங்கள்: நண்பர்கள், இன்னிசை மழை

முதன்முதலில் ரூ.50 கோடி வசூல் செய்த படம்: கில்லி

ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம்: துப்பாக்கி

உலகளவில் பொக்ஸ் ஒஃபிஸ் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டிய முதல் படம்: மாஸ்டர்

தளபதி 65 படம்: லேட்டஸ்டாக விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’

புதிய பூஸ்ட் தகவல்: ‘பீஸ்ட்’ படத்துக்கு பிறகு விஜய், தெலுங்கு பட இயக்குநர் வம்சி படிபல்லி இயக்கத்தில் தனது 66ஆவது படமான ‘வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிப்பு. தமன் இசை. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதை. தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக்: இன்று (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (21) ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருப்பதாக அந்த போஸ்டர் காணப்படுகிறது.

வாரிசு ரிலீஸ்: அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் படம் வெளியாகவுள்ளது.

நடிகர் அஜித் குமாரோடு இணைந்து நடித்த திரைப்படம்: 1995இல் வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’

மீண்டும் அஜித்தோடு இணைவு?: வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்தும் விஜயும் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கங்கை அமரன் அண்மையில் தெரிவித்துள்ளார். இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தீபாவளி ரிலீஸ் படங்கள்:
சந்திரலேகா
பிரியமானவளே
ஷாஜகான்
பகவதி
திருமலை
சிவகாசி
அழகிய தமிழ் மகன்
வேலாயுதம்
துப்பாக்கி
கத்தி
மெர்சல்
பிகில்
சர்கார்

பொங்கல் ரிலீஸ் படங்கள்:
கோயமுத்தூர் மாப்பிள்ளை
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணுக்குள் நிலவு
ஃப்ரெண்ட்ஸ்
வசீகரா
திருப்பாச்சி
ஆதி
போக்கிரி
வில்லு
காவலன்
நண்பன்
ஜில்லா
பைரவா
மாஸ்டர்

You must be logged in to post a comment Login