Cinema

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை

By  | 

முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த அவர், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் களம் கண்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இசைக்குடும்பத்தில் பிறந்த சைந்தவியை, ஜிவி திருமணம் முடித்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சைந்தவி கடந்த  19 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தந்தையான ஜிவி.,க்கும், சைந்தவிக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

You must be logged in to post a comment Login