General

ஜேம்ஸ் பாண்ட் தீவு

By  | 

தாய்லாந்தின் முக்கிய தீவுகளில் ஒன்று காவ் ஃபிங் கான். 1974-க்கு முன்பு இப்படியொரு தீவு இருக்கிறது என்று தாய்லாந்து வாசிகளுக்கே அவ்வளவாகத் தெரியாது. 1974-இல்  வெளியான ‘The Man with the Golden Gun’ என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இந்தத் தீவு இடம்பெறவே ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்டது.

அன்றிலிருந்து இந்தத் தீவை நோக்கி சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். அங்கே புதிது புதிதாக ஹோட்டல்களும், பூங்காக்களும், கேளிக்கை விடுதி களும் உருவாகின. தீவுக்கு ‘ஜேம்ஸ் பாண்ட் தீவு ’ என்று பெயர் வைத்துவிட்டனர்.

You must be logged in to post a comment Login